டி.பி சத்திரம் பகுதியில் துணிக்கடையில் உரிமையாளரை கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிப்பு :2 பேர் கைது

புதன்கிழமை, 10 மே 2017      சென்னை

சென்னை, செனாய் நகர், 3 வது தெரு, கே.வி.என் புரம், எண்.269 என்ற முகவரியில் பழனி, /34,என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார்

 ஆஜர்

கடந்த 08.05.2017 அன்று இரவு 10.30 மணியளவில் மேற்படி கடைக்கு துணி வாங்குவது போல வந்த இரண்டு வாலிபர்கள் மேற்படி பழனியிடம் கத்தியை காட்டி மிரட்டி கல்லாவிலிருந்து பணம் ரூ.7 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இது தொடர்பாக பழனி டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்து மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.லிங்கம் () கணேஷ் () கணேசன், /30, செனாய் நகர் 2.சத்யராஜ், /30, மேலமடுவாங்கரை அண்ணாநகர் ஆகிய இருவரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர்.

குற்றவாளி லிங்கம் () கணேஷ் () கணேசன் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. மேலும் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யராஜ் அண்ணா நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியாவார். இவர் மீது திருவண்ணாமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. மேலும் இவர் கடந்த 2013ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களிடமிருந்து 2 கத்திகள் மற்றும் ரூ.7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட லிங்கம் () கணேஷ் () கணேசன் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: