செங்குன்றம் அருகே தனியார் பள்ளி வாகனங்களை அமைச்சர், கலெக்டர் ஆய்வு

புதன்கிழமை, 10 மே 2017      திருவள்ளூர்

தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி செல்லப்படுகிறார்களா மற்றும் வாகனங்களின் தன்மை குறித்து பள்ளி வாகனங்கள் போக்குவரத்து துறையால் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

 குறைகள் கண்டுபிடிப்பு

இந்த நிலையில் செங்குன்றம் மோட்டார் வாகன அலுவலகத்திற்குட்பட்ட 11 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 135 பள்ளி வாகனங்களை நேற்று மாலை புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்டக்கலெக்டர் சுந்தரவல்லி, போக்குவரத்து சென்னை வடக்கு சரக இணை ஆணையர் அ.வீரபாண்டியன் ஆகியோரர் ஆய்வு செய்தனர். இதில் வாகனங்களுக்கு முதலுதவி பெட்டி , வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசரக்கால கதவு , ஜன்னல்கள் , தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 112 வாகனங்களுக்கு சரியான முறையில் உள்ளது என சான்று அளிக்கப்பட்டது.

சில குறைபாடுகள் உள்ள 23 வானங்கள் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வட்;டார போக்குவரத்து கழகத்தை அணுகும் படி அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது அம்பத்தூர் கோட்டாட்சியர் அரவிந்தன், செங்குன்றம் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி; ஜி.சம்பத்குமார், பூந்தமல்லி வட்டாரப்போக்குவரத்து அதிகாரி முனைவர் சி.நெடுமாறன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: