முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 10 மே 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டத்தில் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம் (ஜமாபந்தி) திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் நேற்று (10.5.2017) திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 ஓய்வூதியம்

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டாமாறுதல், நில அளவை, பட்டா, பெயர் மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்பட 43 மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் திருவாரூர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அ.பதிவேடு, அடங்கல், பட்டா படிவம், நன்செய் புன்செய் கழிவு கணக்கு, பயிராய்வு கணக்கு, மரப்பட்டா பதிவேடு, பட்டா மாறுதல் விவரங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு விவரங்கள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்று சரிபார்த்தார்.

பின்னர் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு மாதமாதம் ரூ.1000-ம் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்காக ஆணையையும், 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவுக்கான ஆணையும், 2 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையையும், 7 நபர்களுக்கு (ஸ்மார்ட் கார்டு) மின்னணு குடும்ப அட்டையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த தீர்வாயத்தில் துணை கலெக்டர் (சுமூக பாதுகாப்புத்திட்டம்) ஜெயலெட்சுமி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகோபாலன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரெங்கசாமி, வட்டாட்சியர் உதயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago