முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளாங்கோடு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 25 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், சிதறால் வருவாய் கிராமத்தில் (வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதிக்கு மட்டும்) வெள்ளாங்கோடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் அவர்களின் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் நிறைவுநாள் நிகழ்ச்சி கலக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தலைமையில் நடைபெற்றது.

 111 கோரிக்கை மனுக்கள்

13.04.2017 அன்று நடைபெற்ற முதற்கட்ட முகாமில் 111 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  இதில் 31 தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்த மனுக்கள் மீதான பதில்களை கலெக்டர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

அதனை தொடர்ந்து, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   வருவாய்த்துறை சமூகபாதுகாப்பு திட்டத்தின்கீழ், 12 நபர்களுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, 2 நபர்களுக்கு திருமணமாகாதோர் உதவித்தொகை, 1 நபருக்கு உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை, என மொத்தம் 15 நபர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ. 1,000- பெறுவதற்கான ஆணைகளையும்,  10 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் கோட்டாட்சியர் இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  நிஜாமுதீன், இணை இயக்குநர் (வேளாண்மைதுறை)    இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர்  சின்னம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவர்  சிவகாமி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்த்துறை) இராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ஷிலாஜான், விளவங்கோடு வட்டாட்சியர் எம்.ஆப்ரகாம் டென்னி, விளவங்கோடு தனி வட்டாட்சியர் (ச.பா.தி) கே.பி.ஜாய் சரோஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்