முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.369 கோடி மதிப்பில் கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 10 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் ரூ.369 கோடி மதிப்பிலான கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துரை  முன்னிலையில் கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில் நடைபெற்றது.

 ஆய்வுக் கூட்டம் 

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதிகளுக்கு திருப்புதல் மற்றும் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டம் ரூ.369 கோடி திருத்திய மதிப்பீடு ரூ.872.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர்  மு.கருணாகரன்  தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பத்துரை  முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் கலெக்டர்  பேசியதாவது:-

விரைந்து முடிக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் திசையன்விளை மற்றும சாத்தன்குளம் ஆகிய வறட்சி பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய நதிகளை இணைத்து செயல்படுத்தும் திட்டத்திற்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஒதுக்கீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் நில எடுப்பு வட்டாட்சியர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும். நில எடுப்பு வட்டாட்சியர்கள் விவசாயிகளுக்கு இத்தொகையினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 1362 விவசாயிகள் கால்வாய் பணிகளுக்காக நிலங்களை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு பணம் உடனடியாக வழங்க வேண்டும். சம்மதம் தெரிவிக்காத விவசாயிகளுக்கு வரும் 19 ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். கால்வாய் 3 ம் கட்ட பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும். நில எடுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மூலக்கரைப்பட்டியில்  இருந்து நம்பியாறு அணைக்கட்டு வரையிலான கால்வாய் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்களும் வருவாய்த்துறை நில எடுப்பு அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேசினார். முன்னதாக இராதாபுரம் சமுத்துவபுரத்தில் உள்ள 95 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர்  வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில்  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் மகேஷ்வரன், பொதுப்பணித்துறை சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் (நாங்குநேரி) ஞானசேகரன், (திருநெல்வேலி) ராமச்சந்திரன், (அம்பாசமுத்திரம்) விஜயகுமார், (வள்ளியூர்) அப்பாஸ்அலி, இராதாபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் புகாரி மற்றும் உதவி பொறியாளர்கள், நில எடுப்பு வட்டாட்சியர்கள், நில அளவையர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்