முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கந்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.35,68,635 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம் வெங்கந்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்  தலைமையில் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள

முகாமில் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்  கலந்து கொண்டு வருவாய்த்துறையின் மூலம் 69 பயனாளிகளுக்கு ரூ.15,40,735- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் ஒப்படைகளையும், பட்டா மாற்றம் முழுபுலம் 17 நபர்களுக்கும், பட்டா மாற்றம் உட்பிரிவு 26 நபர்களுக்கும், மின்னனு குடும்ப அட்டை 36 நபர்களுக்கும், 2 பயனாளிகளுக்கு ரூ.2,05,000- விபத்து நிவாரண உதவித்தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூ.96,000- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகையும், 05 பயனாளிகளுக்கு ரூ.42,000- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 05 நபர்களுக்கு ரூ.62,500- மதிப்பீட்டில் ஈமச்சடங்கு உதவித்தொகையும், 129 பயனாளிகளுக்கு ரூ.3,10,000- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 04 பயனாளிகளுக்கு ரூ.16,000- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.9,800 மதிப்பீட்டில் இலவச சலவைப் பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.14,700- மதிப்பீட்டில் இலவச சலவைப் பெட்டிகளையும், வேளாண்மைத்துறை சார்பாக 14 பயனாளிகளுக்கு ரூ.3,56,600- மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.1,65,000- மதிப்பீட்டில் தோட்டப் பொருட்களையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 11 பயனாளிகளுக்கு ரூ.7,30,300- மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 1 நபருக்கு ரூ.20,000- மதிப்பீட்டில் இரண்டு சக்கர நாற்காலியினையும் என மொத்தம் 334 பயனாளிகளுக்கு ரூ.35,68,635- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைமையுரையாற்றினார்.

நடவடிக்கை

மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதற்கு முன்பாகவே இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறையினால் பரிசீலித்ததன் வாயிலாக பயனாளிகளுக்கு இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.  இன்றைய தினத்தில் அதிக அளவில் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  முன்னதாகவே இம்மனுக்களை கொடுத்திருந்தால், சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு, இவர்களுக்கும் இன்றைய தினத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக அமைந்திருக்கும்.  எனவே, இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடம் அனுப்பப்பட்டு 30 நாட்களுக்குள் மனுக்கள்மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.

ரூ.35 கோடி மதிப்பில் பணிகள்

இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பீட்டிலும், பேரூராட்சி, நகராட்சி சார்பாக மாவட்டம் முழுவதும் ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.35 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று உள்ளது. மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், இப்பணிகள் தொடர்பான போர்வெல், பைப்லைன், மோட்டார் இயந்திரங்களின் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது.

தயார் நிலையில்

தங்கள் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால், தங்கள் நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்தால், அப்பகுதியைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி, ஆய்வு செய்து, அப்பணிக்கான திட்ட மதிப்பீடு செய்து தங்கள் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என கலெக்டர் .இல.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இம்முகாமில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் .ஜீனத்பானு, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் கு.இராதாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அனந்தராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) பத்ரிநாத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், விழுப்புரம் வட்டாட்சியர் .பத்மா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்