முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேர கவன்சிலிங் தொடங்கியது- துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் அனுமதி ஆணை வழங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      வேலூர்
Image Unavailable

 

விஐடி பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் ரேங்க் அடிப்படையில் சேர்வதற்கு கவுன்சிலிங் இன்று தொடங்கியது.பெங்களுரூவை சேர்ந்த ஆராத் பிசாரியா என்ற மாணவருக்கு விஐடி வேலூர் வளாகத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான அட்மிஷன் ஆணையை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்.

அனுமதி ஆணை

 

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை, போபால் மற்றும் ஆந்திரபிரதேசம் வளாகங்களில் இந்தாண்டு பி.டெக் மெக்கானிக், சிவில், கம்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் மற்றும் ஆந்திரா வளாகத்தில் புதியதாக கம்யூட்டர் சயின்ஸ் வித் டேட்டா அனலய்டிக்ஸ் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் வித் நெட்வொர்க்ஸ் அண்டு செக்யூரிட்டி உள்ளிட்ட 20 பொறியியல் பட்டப்படிப்பில் 4700 இடங்களில் சேருவதற்கான நுழைத்தேர்வு ஏப்ரல் மாதம் 5ந் தேதி முதல்16ந் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட்ஆகிய வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள 119 முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட 167 மையங்களில் கணினி முறையில் நடத்தப்பட்டது. இதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 081 மாணவ மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். நுழைத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 23ந் தேதி விஐடி இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

இதில் தகுதி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் அட்மிஷன் வழங்குவதற்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது. விஐடி வேலூர், சென்னை, போபால் மற்றும் ஆந்திரபிரதேச வளாகங்களில் ஒரே நேரத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது. நுழைவுத்தேர்வில் முதற்கட்டமாக் 1 முதல் 8,000 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு இன்று கவுன்சிலிங் நடைபெறுகிறது. 8,001 முதல்14,000 வரை நாளையும் 14,001 முதல் 20,000 வரை நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இம்மாதம் 15ந் தேதி தொடங்கி 22ந் தேதி வரை நடைபெறுகிறது.விஐடி நுழைவு தேர்வில் பங்கேற்றதுடன் மாநில மற்றும் மத்திய கல்வி வாரியம் நடத்தும் +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு100 சதவித படிப்பு கட்டண சலுகையுடனும் விஐடி நுழைவு தேர்வில் 1 முதல் 50 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவிதமும் 51 முதல் 100 வரை ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவிதமும் 101 முதல்1000 வரை பெற்றவர்களுக்கு 25 சதவித படிப்பு கட்டணசலுகை ஜி.வி.பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்று தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கும் மாணவிக்கும் விஐடியில் 100 சதவித படிப்பு கட்டணம் இலவச விடுதி மற்றும் உணவு வசதியுடன் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் அட்மிஷன் வழகங்கப்படுகிறது.விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பெங்களுரூவைச் சேர்ந்த ஆராத் பிசாரியா என்ற மாணவருக்கு பிடெக் சிஎஸ்இ படிப்பில் சேருவதற்கான முதல் அட்மிஷன் ஆணையை வழங்கினார். இதில் விஐடி துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர்கள் முனைவர் வி.ராஜீ, முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் கே. சத்தியநாராயணன், அட்மிஷன் இயக்குனர் முனைவர் கே.மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்