முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை - அருண்ஜெட்லி கண்டனம்

புதன்கிழமை, 10 மே 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் ராணுவ அதிகாரியை பயங்கரவாதிகள் கடத்திச்சென்று சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவத்திற்கு பாதுகாப்புத்துரை அமைச்சர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளால் கடத்தல்

ஜம்மு-காஷ்மீரின் இளம் ராணுவ அதிகாரியான உமர் பயஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஷோபியான் பகுதியில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உமர் பயஸ்  நேற்று முன்தினம் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, உறவினர் இல்லத்தில் வைத்து உமர் பயஸை 6 முதல் 7 பேர் கொண்ட பயங்கரவாதிகள் கடத்திச்சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

துணையாக நிற்போம்

சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் உடல்  தலை மற்றும் வயிற்றுப்பகுதியில்  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் நேற்று மீட்க்கப்பட்டது. ஹார்மயன் பகுதியில் உடல் மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால் ஆயுதம் எதுவும் இன்றி உமர் பயஸ் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோக சம்பவத்தில் துணிச்சலான ராணுவ வீரரை வணங்குவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு துணையாக நிற்போம் எனவும்  ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை தண்டிக்க முழு உறுதியுடன் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.

ஜெட்லி கண்டனம்

இளம் ராணுவ அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரரை கடத்தி சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளின் செயல் கோழைத்தனமானது ஆகும். ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த இளம் அதிகாரி சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்தார். மிகச்சிறந்த விளையாட்டு வீரரான உமர் பயஸின் தியாகம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளை அழிக்க வேண்டியதன் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago