முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் வருவாய் தீர்வாயக் கணக்கு தணிக்கை கலெக்டர் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 11 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்;டாட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1426-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களுக்குட்பட்ட 400 வருவாய் கிராமங்களுக்கான  தீர்;வாய தணிக்கை வரும் 23.05.2017 வரை நடைபெறுகின்றது. அதன்படி, ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருவாய் தீர்;வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. வருவாய் தீர்;வாய தணிக்கையின் முதல் நாளில் பெருங்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட தேர்போகி, குயவன்குடி, வாலாந்தரவை, கும்பரம், காரான், இரட்டையூரணி, பெருங்குளம், அழகன்குளம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. இத்தணிக்கை முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நில அளவைக் கருவிகள் சரியான நிலையில் உள்ளனவா என்பது குறித்தும், வருவாய் கிராம கணக்குகள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் தணிக்கை செய்தார். மேலும் இந்த தணிக்கையின் போது  மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கையின் போதே 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 9 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் அந்தந்த தினங்களில் நடைபெறும் தணிக்கை முகாம்களில் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி உடனடி தீர்;வு காணலாம்.  இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) சி.ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) கே.கே.கோவிந்தன், ராமநாதபுரம் வட்டாட்சியர் நா.சண்முகசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர்கள் முருகவேல், வீரராஜ், முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்