முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் பக்தர்கள் தரிசனம்

வியாழக்கிழமை, 11 மே 2017      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் சித்ராபௌர்ணமி சித்திரை திருவிழாவினை முன்னிட்டு வரதராஜபெருமாள் பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கினார். இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வரதராஜபெருமாள் ஆற்றில் இறங்கும் அழகை கண்டு ஆனந்தபரவசமடைந்தனர். இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கடந்த மாதம் ஏப்ரல் 26&ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 7&ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று இரவு இரவு 11 மணியளவில் சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலிருந்து குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் சன்னதியை விட்டு மேள தாளம் முழங்க புறப்பட்டார். இன்று(10.05.17 புதன்கிழமை) அய்யம்பாளையம் வரை பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி இன்று காலை 7.20 மணியளவில் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்குகினார். அதன்பின்பு அய்யனார் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அய்யம்பாளையம் ஆர்ய வைஷ்ய மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
ஆற்றில் வரதராஜ பெருமாள் இறங்கும் நிகழ்ச்சிக்காக அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய் உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நாளை 11.05.17 வியாழக் கிழமை தசாவதாரமும், 12.05.17 வெள்ளிக் கிழமை ஸ்ரீ ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையம் நகர் வலமும் நடைபெறுகின்றது. 13.05.17 சனிக்கிழமை சன்னதிக்கு புறப்பாடும், பூப்பல்லாக்கில் சித்தரேவு நகர் வலமும் நடைபெறுகின்றது. 14.05.17 ஞாயிற்றுக் கிழமை காமதேனு வாகனத்தில் மஞ்சள்நீராடி திருக்கோவில் வந்தடைதலுடன் திருவிழா நிறைவுபெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மகேந்திரபூபதி, தக்கார் கணபதிமுருகன்,தலைமை கணக்காளர் ராஜா மற்றும் கோவில் பரம்பரை அர்ச்சகர்கள் ராஜநரசிம்ம அய்யங்கார்,சூரியபிரகாஷ் அய்யங்கார் மற்றும் விழா குழுவைச் சேர்ந்த தங்கவேல்,அர்ச்சுணன், தர்மலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள். இவ்விழாவில் முன்னாள் ஆத்து£ர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.டி.நடராஜன், முன்னாள் ஆத்து£ர் ஒன்றிய குழுதலைவர் கோபி,முன்னாள் அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டிவீரன்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்