மாதா அமிர்தானந்தமயிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

வியாழக்கிழமை, 11 மே 2017      ஆன்மிகம்
Mata Amritanandamayi(N)

திருவனந்தபுரம்  - கேரளாவைச் சேர்ந்த ஆன்மிக தலைவி மாதா அமிர்தானந்த மயிக்கு (64) மத்திய அரசு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம் யோகா குரு பாபா ராம்தேவுக்கு அடுத்தபடியாக இவ்வகை பாதுகாப்பு பெற்ற 2-வது ஆன்மிக தலைவர் என்ற பெருமை இவருக்குக் கிடைத் துள்ளது.  இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியபோது, “மாதா அமிர்தானந்தமயிக்கும் (அம்மா) கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள அவரது ஆசிரமத்துக்கும் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்புப் பயிற்சி பெற்ற இவர்கள், அம்மாவின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்” என்றனர்.

அமிர்தானந்தமயிக்கும் அவரது ஆசிரமத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய பாதுகாப்பு உளவு அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தன. இதை யடுத்து இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் விஜய் சம்ப்ளாவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாது காப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: