கோபி பகுதியில் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.160.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டடத்தினை மாவட்ட கலெக்டர்எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வியாழக்கிழமை, 11 மே 2017      ஈரோடு
11 5 2017 ph (1)

கோபி பகுதியில் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.160.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டடத்தினை மாவட்ட கலெக்டர்எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், மல்லிபாளையம், அளுக்குளி ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.160.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அடிப்படை வசதிகள்

இந்த ஆய்வில் இக்கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் வசதி, கழிவுநீர் கட்டமைப்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சாய்வு நடை பாதை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மேலும் இப்பள்ளியில் கட்டடப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் அறை, அலுவலக அறை, ஆசிரியைகள் அறை, கலைப் பயிலக அறை, கணிப்பொறி ஆய்வகம், நூலகம், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை போன்ற வசதிகளுடன் கூடிய கட்டடத்தினை மாவட்ட கலெக்டர்        எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவி செயற்பொறியாளர்கள் .எஸ்.விஸ்வநாதன்,.முருகேசன், அனைவருக்கும் கல்வி இடைநிலைத் திட்டத்தின் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்.பி.ராஜாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .வை.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: