முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்த நெல்லை நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் கலெக்டர் மு.கருணாகரன் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 11 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்த திருநெல்வேலி நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம், மற்றும் உள்ளுர் திட்டக்குழும அலுவலகத்தில் கலெக்டர் மு.கருணாகரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

காணொலி காட்சி

 திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை கூர்நோக்கு இல்லம் அருகில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம், உள்ளுர் திட்டக் குழும அலுவலகம் ஆகியவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாhகள்;. அதனைத்தொடர்ந்து திருநெல்வேலி நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்தில் கலெக்டர் மு.கருணாகரன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

கலெக்டர் பார்வையிட்டார்

 திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் தெற்கு புறவழிச் சாலை கூர்நோக்கு இல்லம் முன்புறம் மொத்த 42 சென்ட் நிலப்பரப்பில் தரைத்தளம் 1000 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளத்தில் நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் 5,000 சதுர அடி பரப்பளவிலும், இரண்டாம் தளத்தில் உள்ளுர் திட்டக் குழம அலுவலகம் 5,000 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. மேலும் தரைத்தளத்தில் 14 கார் பார்கிங்கும், ஓட்டுநர் ஓய்வு அறை, காவலர் தங்கும் அறை, மாற்றுத்திறனாளிகள் சாய்வு தளம் உள்ளிட்டவைகளும் கட்டப்பட்டுள்ளது. இவைகளை கலெக்டர் மு.கருணாகரன் பார்வையிட்டார்.

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் நாகராஜன், உறுப்பினர் செயலர் வேல்முருகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஹேமாவதி, உதவி பொறியாளர்கள் பீரப்பா, ராஜலட்சுமி மற்றும் நகரமைப்பு துணை இயக்குநர் அலுவலர்கள், உள்ளுர் திட்டக் குழும அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்