முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாதுறையில் தமிழகம் தொடர்ந்து முதன்மை இடத்தை வகிக்கிறது: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

இந்தியாவில் சுற்றுலாதுறையில் தமிழகம் தொடர்ந்து முதன்மை இடத்தை வகிக்கிறது என தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறினார்.

 ஆய்வு பணிகள்

தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்செந்தூருக்கு நேற்று வந்தார். இங்குள்ள ஹோட்டல் தமிழ்நாட்டில் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். இங்குள்ள ஹோட்டல் தங்கும் அறைகள், ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் உள்ள பகுதிகள், உணவு விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதிகளில் உள்ள வசதிகள் குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் விடுதியில் தங்குள்ள சுற்றுலா பயணிகளிடம், குறைகள் எதுவும் உள்ளதா என நேரில் கேட்டறிந்தார். பின்னர் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது

சுற்றுலா துறையில் வளர்ச்சி

மிழக அரசு சுற்றுலா துறையில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. இந்தாண்டும் இந்தியாவில் சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்பதை  என்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுலாதுறையை அரசு அதிகாரிளோடு சென்று ஆய்வு செய்து வருகிறோம்.

குறைகளை கேட்டேன்

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் இங்குள்ள சுற்றுலாதுறை சொந்தமான ஹோட்டல் தமிழ்நாட்டில் உள்ள விடுதிகள், வளாகங்கள், உணவு விடுதிகள் ஆகிவை சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தேன். அவர்களும் அனைத்து வசதிகளும் நிறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் பொதுப்பணித்துறையால் விருந்தினர்மாளிகை கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவற்றை வரும் நிதியாண்டில் சுற்றுலா துறை நிதி மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கவனத்திற்கு கொண்டு சென்று பேசி முடிவு செய்யப்படும். மேலும் இங்கு கூடுதல் விடுதிகள் கட்டுவது குறித்து ஆலோசனை செய்யப்படும். இங்கு திருமண மண்டபம் வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

100 ஆண்டுகள் தொடரும்

தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு, அவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆட்சி நடந்து வருகிறது. எங்களது இயக்கத்திற்குள் சின்ன சின்ன பிணக்குகள் ஏற்பட்டாலும் சேதாரம் எங்களுக்கு தான். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எங்களது கட்சிக்குள் ஏற்பட்டிருப்பது சிறிய பிரச்சனை தான். இதுகுறித்து இரு அணியின் மூத்த தலைவர்களும் தொடர்ந்து இணைவது குறித்து முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த இயக்கத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்புகளும் அது தான். பொதுமக்களும் இந்த ஆட்சி தொடர வேண்டு என எதிர்பார்க்கின்றனர். எனவே இரு அணியில் உள்ள மூத்த தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் காலத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு வரும் உள்ளாட்சி, பார்லிமெண்ட். சட்டசபை தேர்தல்களில் சரித்திரம் காணாத வகையில் வெற்றியை மீண்டும் பெறுவோம். இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும். இதை தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வில் சுற்றுலா துறை மண்டல மேலாளர் சுகுமாரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், பொதுப்பணிதுறை தலைமை இன்ஜினியர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராமகிருஷ்ருணன், உதவி இன்ஜினியர் கணேசன், மின்இன்ஜினியர்கள் ரத்தினவேல், பால், திருச்செந்தூர் ஹோட்டல் தமிழ்நாடு மேலாளர் ரவி, ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வடிவேல், ராஜாநேரு, வீட்டு வசதி சங்க தலைவர் மணல்மேடு முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் கன்னியாகுமரிக்கு ஆய்வுக்கு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்