முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100க்கு 100சதவீதம் தேர்ச்சி பெற்று திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி அபார சாதனை

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-பிளஸ்டூ தேர்வில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம் திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் 337 பேரும் அதிக மதிப்பெண்களுடன்  100க்கு 100சதவீதம் தேர்ச்சி பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சாதனை படைத்த திருமங்கலம் பி.கே.என் பள்ளி மாணவிகளை பள்ளி கமிட்டி நிர்வாகிகள்,தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
அண்மையில்நடைபெற்று முடிந்த 2016-2017ம் ஆண்டிற்கான பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.இதில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம் திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 1182 மதிப்பெண்களுடன் அக்கவுன்டன்சி பாடத்தில் 200மதிப்பெண் பெற்றுள்ளார்.யோகபிரபா என்ற மாணவி 1170 மதிப்பெண்களுடன் கணிதபாடத்தில் 200மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.மேலும் வெண்;ணிலா என்ற மாணவி 1168 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அதே போல் காமர்ஸ் பாடத்தில் அனிதா,சுந்தரேஸ்;வரி,சந்திரபிரபா ஆகிய 3மாணவிகள் 200மதிப்பெண்களும் அக்கவுன்டன்சி பாடத்தில் ஜனனி,அனிதா,மதுமிதா,சந்தியா ஆகிய 4மாணவிகளும்,கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் சுபா என்ற மாணவி 200மதிப்பெண்ணும், கணித பாடத்தில் யோகபிரபா என்ற மாணவி 200மதிப்பெண்னும் பெற்று சாதனை படைத்தனர்.

இந்நிலையில் திருமங்கலம் பி.கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தேர்வு எழுதிய   மாணவிகள் 337 பேரில் 337 பேரும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 100க்கு100 சதவீத தேர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தினார்கள்.இதில் 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 129 மாணவிகளும்,1100 மதிப்பெண்ணுக்கு மேல் 26 மாணவிகளும் பெற்று அபார சாதனை படைத்தனர்.இதையடுத்து உசிலை கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்த பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்டூ மாணவிகளுக்கும் சாதனைக்கு பாடுபட்ட ஆசிரியைகள் மற்றும் அலுவலக பெருமக்களுக்கு திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலெட்சுமி,பள்ளி கமிட்டி தலைவர் ஜெ.மோகன் நாடார்,செயலாளர் ஜெ.பார்த்திபன் நாடார்,பொருளாளர் எஸ்.நவமணி நாடார் ,டைரக்டர் பி.பரமேஷ்நாடார் மற்றும் உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்