முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்புலிபுத்து£ர் கதலி நரசிங்கபெருமாள் கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலிநரசிங்கபெருமாள் கோவில் அமைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கதலிநரசிங்கபெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்கிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் நரசிங்கபெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசித்தி பெற்ற தேரோட்ட நிகழ்ச்சி சித்திரா பௌர்ணமியில் மாலை நடைபெற்றது. கதலிநரசிங்கபெருமாள்,ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.திருத்தேரை கோவிலுக்கு பாத்தியப்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர் திருத்தேர் கோவில் வீதி வழியாக உலா வந்தது.தேரோட்டத்தின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்த,கோவிந்த ன்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.பிரசித்தி பெற்ற இந்த தேரோட்ட நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.முதல் நாள் திருத்தேர் கோவில் வீதியான சாவடியில் நிருத்தப்பட்டது.அதனை தொடர்ந்து நேற்று திருத்தேர் நிலைக்கு வந்தது.இந்த நிழ்கச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசித்தனர்.நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்