முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டம் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் இலவச தாய் சேய் ஊர்தி: கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிராம் (துளுளுமு) திட்டத்தின் கீழ் புதிய இலவச தாய் சேய் ஊர்தியினை கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்து பேசியதாவது:-

தாய்சேய் ஊர்தி

மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்ஸ் வசதியின் மூலம் விபத்து, இயற்கை இடர்பாடுகள் மற்றும் அவசர நேரங்களில் உயிர்களை காக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இதுவரை 5 இலவச வாகன ஊர்திகள் மக்களின் அவசர காலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த சேவையினை பயன்படுத்தி 2016 முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் இருந்து 5000 நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இயங்கி வரும் 5 வாகனங்களை 10 வாகன ஊர்திகளாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிராம் திட்டத்தின் கீழ் இலவச தாய் சேய் ஊர்தி நேற்று(12.05.2017) தொடங்கப்படவுள்ளது. வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தற்போது 1200 முதல் 1500 வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். வெளி நோயாளிகள் 85 முதல் 90 வரை அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள அம்மா வார்டில் 10 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வழங்கப்பட்டுள்ள இலவச தாய் சேய் ஊர்தியின் வாயிலாக பிரசவித்த தாய்மார்கள் எந்தவித சிரமமுமின்றி அவர்களின் இல்லங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்படுகின்றனர். இந்த தாய் சேய் ஊர்தி சேவையை வேலூர் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சி.அ.ராமன், கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.கலிவர்தன், பென்ட்லேன்ட் மருத்துவமனை முதன்மை மருத்துவர் மரு.ஜெயகீதா, வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் இந்திரநாத், பொருளாளர் ஆடிட்டர் பாண்டியன் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்