முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளை ஜெயேந்திர சுவாமிகள் , பிரான்சிஸ் ஸேவியர் பள்ளி, ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவ,மாணவிகள் அபாரம்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      திருநெல்வேலி

நெல்லையில் பாளை  ஜெயேந்திர சுவாமிகள் பள்ளி , வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பள்ளி,தாழையூத்து ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி மாணவ,மாணவிகள் பிளஸ் டு தேர்வில் அபார சாதனை படைத்துள்ளனர்.

 சாதனை

பாளை மகாராஜாநகர் ஜெயேந்திர சுவாமிகள் சில்வர் ஜூபிலி மெட்ரிக் பிளளை மாணவி சம்சு நிஷா 1189 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக சாதனை படைத்துள்ளார் , மாணவன் ஸ்ரீனிவாசன் 1183 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் மாணவி ஆதிரா 1182 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடத்தையும் பிடித்தனர் இவர்களின் மதிப்பெண்கள் பின் வருமாறு -பள்ளி டாப்பராக சம்சு நிசா பிரென்ச் பாடத்தில் 198, ஆங்கிலத்தில் 192, பொருளாதாரத்தில் 200, வணிகத்தில் 200, அக்கவுண்டன்சியில் 200, பிசினெஸ் கணக்கில் 199 மொத்தம்-1189, பள்ளி டாப்பராக சாதனை படைத்த ஸ்ரீனிவாசனின் மதிப்பெண்கள் தமிழில் -197, ஆங்கிலத்தில்-191, பிசிக்சில் -197, கெமிஸ்ட்ரியில் 198, கம்ப்யுட்டர் சயின்ஸில் 200, கணக்கில்-200 என மொத்தம் 1183, 2வது இடத்தை பிடித்த ஆதிரா தமிழில் -194, ஆங்கிலம்-193, பொருளாதாரம்-195, வணிகம்-200, அக்கவுண்டன்சி -200, பிசினஸ் கணக்கு-200 என மொத்தம் 1182ஆகும் , அதிக மதிப்பெண்கள் பெற்ற இந்த மாணவ,மாணவிகளுக்கு பள்ளி இயக்குனர் ஜெயேந்திரன் மணி, பள்ளி தாளாளர் ஜெயந்தி  ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பாராட்டு

இதே போல் வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக் பள்ளியில் டானிஷ் 1175, ஷின்லி 1173, வர்ஷா 1171 ஆகிய மாணவிகள் முதல் ,இரண்டாம்,மாற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர் ,அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர்களுக்கு பள்ளி முதல்வர் ,தாளாளர் மற்றும் மாணவ,மாணவிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர் ,இதே போல சங்கர்நகர்  ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூபிலி மெட்ரிக் பள்ளி மாணவி கஜோல் 1181 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதலிடத்தையும் , மாதவ் 1174 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடத்தையும்,அர்ஷத் முகம்மது ,ஜெயலட்சுமி ஆகியோர் 1167 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3 ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர் .இவர்களை பள்ளி நிர்வாகிகள் தாளாளர் நிர்மல் ராமரத்தினம், முதல்வர் உஷாராமன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்