முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில்பிளஸ்2 பொதுத்தேர்வில் 93.55 சதவீதம் தேர்ச்சி

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      பெரம்பலூர்

 

பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.5.2017) தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 93.55சதவீதம் தேர்ச்சிபெற்று மாநில அளவில் 15வது இடம்பெற்றுள்ளது.

 தேர்ச்சி விகிதம்

நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,664 மாணவர்களும், 4,547 மாணவிகளும் என மொத்தம் 9,211 பேர் தேர்வெழுதினர். இதில் 4,323 மாணவர்களும், 4,294 மாணவிகளும் என மொத்தம் 8,617 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 68 மேல்நிலைப்பள்ளிகளில் 17 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் எளம்பலூர் மற்றும் கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகிளில் பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப்பள்ளியும், சுயநிதிப்பள்ளிகளில் துறைமங்கலம் அன்னை ஈவாமேரிகோக், படாலூர் அன்னை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன், பனிமலர், ஸ்ரீசாரதா தேவி(பெண்கள்), தந்தை ரோவர் ஆகிய 6 மேல்நிலைப்பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளில் உடும்பியம் ஈடன்காடன், பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ், நக்கசேலம் ஹையாகிரேவா, அயன்பேரையூர் விஸ்டம், அரும்பாவூர் சாந்திநிகேதன், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா, திருமாந்துறை செயின்ட் ஆண்ரூஸ், அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா ஆகிய 8 பள்ளிகளும் என மொத்தம் 17 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் சூப்பர்-30 என்ற சிறப்பு வகுப்பில் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயின்ற 54 மாணவ-மாணவிகளும், சு.ஆடுதுறை மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 27 மாணவ மாணவிகளும், பாடாலூர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 26 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 107 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்