முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், ராஜலெட்சுமி ஆய்வு

சனிக்கிழமை, 13 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது கலெக்டர்மு.கருணாகரன்  நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 துறை சார்ந்த பணிகள்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலங்குளம் வட்டம் கீழப்பாவூர் நரசிங்கபெருமாள் கோயிலில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தங்கும் விடுதி, பேவர் பிளாக் கார் பார்கிங், தடுப்புச் சுவர் கட்டுதல், நவீன கழிப்பிட அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் கீழப்பாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.8.00 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள்                 தொடர்ந்து இலஞ்சி திருவிலஞ்சி குமரன்கோவில் செல்லும் சாலை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைப்பது தொடர்பாகவும், குற்றாலத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் செய்யப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும் குற்றாலம் அருவி பகுதியை சுற்றுலாத்துறை அமைச்சர் பார்வையிட்டு பொதுமக்களிடம் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

திட்ட மதிப்பீடு தயார்

தமிழகத்தில் சுற்றுலா மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. இதற்காக மத்தியரசின் விருது பெறப்பட்டுள்ளது.கீழப்பாவூர் இலஞ்சி மற்றும் குற்றால பகுதிகளில் இன்று பார்வையிடப்பட்டது. கீழப்பாவூர் நரசிங்கபெருமாள் கோயிலில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் வசதிகள்

மேலும் குற்றால பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் அருவி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலா பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்தழைப்பு அளிக்க வேண்டும். பிரசாத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாவட்டத்திற்கு ரூ.12.50 கோடி ஒதுக்கப்பட்டு சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டு குற்றாலம் பகுதியில் இத்திட்டத்தின் கீழ் பணிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின் போது தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பி.ராஜேந்திரன், குற்றாலம் தமிழ்நாடு ஹோட்டல் மண்டல மேலாளர் சுகுமார், மேலாளர் பி.அசோகன், சுற்றுலா அலுவலர் நெல்சன், ஆவின் சேர்மன் ரமேஷ், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம், பேரூராட்சிகள்துறை உதவி செயற்பொறியாளர் ஜோதி முருகன், உதவிப் பொறியாளர் ஹரிகரன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜன், குற்றாலம் செயல் அலுவலர் லிங்கராஜ், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முக்கிய பிரமுகர் சேர்மபாண்டி, சண்முக சுந்தரம், கிருஷ்ணமுரளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்