முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்ரா பவுர்ணமி: கள்ளபிரான் சுவாமிகள் தாமிரபரணி ஆற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

சனிக்கிழமை, 13 மே 2017      தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் சித்ரா பவுர்ணமி விழாவில் கள்ளபிரான் சுவாமிகள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்றது.

 மண்டுக ரிஷிக்கு மோட்சம்

சித்திரையில் வரும் முதல் பவுர்ணமியானது மிகவும் விஷேசமானதாகும். தவளை வடிவத்தில் இருந்த மண்டுக ரிஷிக்கு மோட்சம் கொடுப்பதற்காக கள்ளபிரான் சுவாமி தாமிரபரணி ஆற்றுக்கு சென்று காட்சி கொடுத்தார் என்பது ஆன்மிக வரலாறாகும். இதன்படி, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரை கிருஷ்ணன் கோவில் படித்துறைக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த கள்ளபிரான் சுவாமிக்கு தீபாரதனையுடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது. இதில், நிர்வாக அதிகாரி கார்த்திக், ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஸ்ரீனிவாசன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago