முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாதுமணல் இருப்பு விபரங்களை ஆய்வு செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேலாண்மை இயக்குநர் சத்யபிரதாசாஹீ தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 13 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

 

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி தாதுமணல் இருப்பு விபரங்களை ஆய்வு செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன், முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யபிரதாசாஹீ, தலைமையில் நடைபெற்றது.பின்னர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

லெக்டர்களுடன் ஆய்வு

 திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தாதுமணல் குடோன்கள், உற்பத்தி பகுதிகள் ஆகியவற்றில் எவ்வளவு தாதுமணல் இருப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக கலெக்டர்களுடன் ஆய்வு நடத்தி வருகிறோம். அடுத்த கட்டமாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து விஞ்ஞான பூர்வமாக ஒவ்வொரு கனிமங்களில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை கண்டறிய ஆய்வு செய்யப்படும். இதற்காக நவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

அறிக்கை தாக்கல்

 திருநெல்வேலி மாவட்டத்தில் 25 ம் தேதி ஆய்வுப் பணி தொடங்கப்படும். இதற்காக இந்த ஆய்வுப் பணியில் 3 குழுக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்தக் குழக்களில் நில அளவை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்த்துறை ஆகிய மாநில அரசு அதிகாரிகளும், இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம், மத்திய அணுசக்தி இயக்குனரகம், மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு துல்லியமாக கண்காணித்து அறிக்கை தயாரிக்கும்.இந்த ஆய்வறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூன் இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். என தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் வல்லான்விளை கிராமத்தில் சீல் வைக்கப்பட்டள்ள தாதுமணல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர்இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார்,இ.கா.ப., திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago