முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலகிரி மலையில் கோடை விழா சிறப்பாக நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம்: அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடந்தது

சனிக்கிழமை, 13 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஜோலார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரி மலையில் 2017 ஆம் ஆண்டிற்கான கோடை விழா வரும் 27.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரங்குகள் அமைப்பது குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஏலகிரி மலை ஓட்டல் ஹில்ஸ் கூட்டரங்கில் வணிகவரி மற்றும பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பேசியதாவது:

வேலூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலையில் வருடந்தோறும் நடத்தப்படும் கோடை விழா இந்த ஆண்டு மே மாதம் 27.05.2017 மற்றும் 28.05.2017 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் சுற்றுலாத்துறை, வணிகவரித்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள், போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டைவிட மிகசிறப்பாக செய்யபடவேண்டும் ஆகவே சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பணியினை சிறப்பாக செய்திட வேண்டும். இந்த வருடம் பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்திட சென்னையிலிருந்து தேவா இசை குழுவினரின் ; இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளது. மேலும் சின்ன திரை நடிகர்களின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளது பொதுமக்கள் ஏலகிரிமலைக்கு சிறமமின்றி வந்துசெல்ல வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டதற்கு இவ்விழாவிற்கு 60 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் திருப்பத்தூரில் இருந்து 35 பேருந்துகள் வேலூரில் இருந்து 5 பேருந்துகள் வாணியம்பாடியில் இருந்து 5 பேருந்துகள் ஆம்பூரிலிருந்து 5 பேருந்துகள ;மற்றும் பொன்னேரி மலை அடிவாரத்திலிருந்து சிறிய பேருந்துகள் 10 என 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தெரிவித்தார். மேலும் செய்தி துறையின் மின்னனு வாகனத்தின் மூலம் தமிழநாடு அரசின் சாதனை விளக்க வீடியோ படகாட்சிகள் நடத்திடவும் வணிகவரித்துறை அமைச்சர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

பின்னர் கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்திட துணை இயக்குநர் பொது சுகாதாரம் அவர்களிடமும், காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும்,; அனைத்து துறைகளின் பல்துறை விளக்க கண்காட்சிகளை அமைத்திட அரங்குகள் அமைக்கும் பணிகளை கண்காணிக்கும் மகளிர் திட்ட அலுவலரிடமும், வேளாண் துறை மூலம் செய்யப்படும் மலர்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சி பணிகளை செய்திடும் இணை இயக்குநர் வேளாண்மை அவர்களிடமும், நாய்கள் கண்காட்சி பணிகளை ஏற்பாடு செய்யும் கால்நடை துறை அலுவலரிடமும் கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மற்ற மாவட்டத்தில் இருந்து அதிகப்படியாக கழிப்பறைகள் அமைத்திட நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் அவர்களிடமும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தும் விதமாக கபடி போட்டிகள். மராத்தான் ஓட்ட பந்தயம், மலை ஏறும் போட்டி போன்ற போட்டிகளை மேற்கொள்ளவும் மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களிடமும், பொதுமக்கள் படகு சவாரியை மேற்கொள்ளவும் படகுகளை பாதுகாப்பாக இயக்கவும் ஊரக வளர்ச்சி அலுவலர்களிடமும், சாலைகளை சிறப்பாக பராமரிக்க நெடுஞ்சாலை பொறியாளர்களிடமும் மற்றும்; அனைத்து துறை அலுவலர்களிடம் தங்களின் துறைகளின் சார்பாக செய்யப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்து கோடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாகவும் விரைந்து முடித்திட வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்திரவிட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு விழா மேடை அமைக்கும் பணிகளையும் பல்வேறு துறைகளின் சார்பாக அமைக்கப்படும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகளையும் பூங்கா செப்பணிடும் பணிகளையும் படகு இல்லத்தில் உள்ள வசதிகளையும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, ஆவின் தலைவர் த.வேலழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பிச்சாண்டீ (வளர்ச்சி), திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், இணை இயக்குநர் மருத்துவம் கலிவரதன், இணை இயக்குநர் வேளாண்மை வாசுதேவரெட்டி (பொ), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஐவேலு துணை இயக்குநர் சுகாதாரம் தேவபார்த்தசாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் ரமேஷ,; துணை இயக்குநர் தோட்டகலை பொன்னு, வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், ஜோலார்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.ரமேஷ்மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago