முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நொச்சிமலை ஊராட்சியில் தடுப்பணை கட்டும் பணி: கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு

சனிக்கிழமை, 13 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சிமலை ஊராட்சியில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று ஆய்வு செய்தார்.

தடுப்பணை கட்டும் பணி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சிமலை ஊராட்சி வாணியந்தாங்கல் பகுதியில் கிளிப்பட்டு செல்லும் (நீர்வரத்து கால்வாய்) அஸ்தா ஓடை குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ. 92 ஆயிரம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று (சனிக்கிழமை) ஆய்வு செய்த அவர், தொழிலாளர்களுடன் தடுப்பணை கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1037 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 950 பணிகள் முடிவடைந்துள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் வி.புருஷோத்தமன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) தனி அலுவலருமான பெ.அமாவாசை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என்.மோகன்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) இனியன், உதவி செயற்பொறியாளர் கே.ராஜராஜன், உதவி பொறியாளர்கள் ரவிச்சசந்திரன், ராஜலட்சுமி, பணி மேற்பார்வையாளர்கள் பி.சங்கர், எஸ்.தங்கதுரை, ஜி.செல்வம், ஊராட்சி செயலர் எஸ்.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago