கோட்டைக்குப்பம் ஊராட்சியில் பேரிடர் இன்னல் தீர்ப்புக்குழு : சப்-கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டார்

சனிக்கிழமை, 13 மே 2017      சென்னை

பொன்னேரி அடுத்த கோட்டைக்குப்பம் ஊராட்சியில் பேரிடர் இன்னல் தீர்ப்பு திட்டத்தின் மூலன் பேரிடர் மீட்புக்குழவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயற்சிகள் அளிக்கப்பட்டது.இதனை பொன்னேரி சப்-கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டு அவர்களுக்கு ஊக்கமூட்டினார்.

40 கிராமங்கள்

சேவ் த சில்ரன் பன்னாட்டு தொண்டு நிறுவனம், நோக்கியா,ஒளவை கிராம சீரமைப்புச்சங்கம் ஆகிய நிறுவங்களின் கூட்டு முயற்சியோடு மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்களில் பேரிடர் இன்னல் தீர்ப்பு திட்டம் நடைப்பெற்று வருகின்றது.பொன்னேரி சப்-கலெக்டர் தண்டபாணி பஞ்சாயத்து பேரிடர் மேலாண்மை வள மையத்தையும் பார்வையிட்டு பேரிடர் இன்னல் தீர்ப்புக்குழுவினருக்கு பல்வேறு விளக்கங்கள் அளித்தார்.

இந்த நிகழ்வில் சேவ் த சில்ரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர்,ஈரோகா நிறுவன மேலாளர் ஆரியா,ஒளவை கிராம நலசங்க செயலாளர் கிருஷ்ணகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார்,இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அரசாங்க தொடர்பு மேலாளர் பி.வி.பிரகாஷ்ராவ்,வருவாய் ஆய்வாளர் நடராஜன்,கிராமநிர்வாக அலுவலர் செந்தில்,மோகனசுந்தரம் உள்ளிட்ட ஒளவை கிராம நலசங்க பணியாளர்கள்,கோட்டைக்குப்பம் கிராம நிர்வாகிகள்,கலந்துக்கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: