முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னசந்திரம் ஊராட்சியில் ரூ.14.55 லட்சம் மதிப்பில் புதிய கிராம சேவை மையம், மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பில் தார் சாலை: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 13 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சென்னசந்திரம் ஊராட்சி விஸ்வநாதபுரம் கிராமத்தில், ரூ.14.55 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டிடத்தையும், கூபல்லி கூட்டு சாலை முதல் திருப்பதி மெஜஸ்டிக் வரை ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய சாலை என மொத்தம் 24.55 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று (13.05.2017) பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னசந்திரம் முதல் விஸ்வநாதபுரம் வரை சாலையின் இருபுறமும் 500 மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

 

பணிகள் துவக்கம்

கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து தெரிவித்ததாவது:மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல் ஆசியுடம் இன்று ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னசந்திரம் கிராமத்தில் ரூ.24.55 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகிறது. அதன் படி இன்று விஸ்வநாதபுரம் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள கிராம சேவை மையத்தில் இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிட்டா, ஆதார்அட்டை, மாணவ மாணவியருக்கு தேவையான கல்வி சான்றிதல்கள், மற்றும் கணினி வழியாக பெறப்படும் அத்துனை ஆவணங்களும் வரும் காலத்தில் இந்த .சேவை மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்ற பிற அலுவலகங்களுக்கு சென்று நேர காலம் விரயம் ஆவதை தடுக்கும் வகையில் அம்மா அவர்களின் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாநில நிதிகுழு மானிய திட்டத்தில் கூபல்லி கூட்டு சாலை முதல் திருப்பதி மெஜஸ்டிக் வரை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. மேலும் சென்னசந்திரம் முதல் விஸ்வநாதபுரம் வரை சாலையின் இருபுறமும் 500- மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் தங்களின் பங்களிப்புடன் பாதுகாத்து மழை மற்றும் தூய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமுடன் வழ வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், சாந்தி, வட்டாட்சியர் பூசனகுமார், ஒன்றிய பொறியாளர்கள் கௌரி, தமிழ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு,சு.மோகன், கூட்டுறவு சங்க தலைவர் வி.டி.ஜெயராமன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் திரு,ஜெயபிரகாஷ், வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுமித்திராபிரபாகர் ரெட்டி, மற்றும் ஊராட்சி செயலாளர் என்.மாதேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்