மணலியில் ஏழு இடங்களில் நீர்மோர் பந்தல் அமைப்பு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் திறந்தார்

சனிக்கிழமை, 13 மே 2017      சென்னை
Tiruvetrilyur 2017 05 13

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் பெரியகாசிகோயில் குப்பத்தில் வட்டகழக செயலாளர் லயன்ஆர்.வீரக்குமார் ஏற்பாட்டில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்ட குடிநீர் பந்தலை முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

7 இடங்கள்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் 7 இடங்களிலும் மணலியில் ஏழு இடங்களிலும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மணலியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கே.சி.சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வட்டகழக செயலாளர் பி.ஜனார்த்தனம் முன்னிலையில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வட்டகழக நிர்வாகிகள் கா.சு.ஜனார்த்தனம், டி.தட்சிணாமூர்த்தி, மைக்கேல்ராஜ், சிவில் எம்.முருகேசன், வி.பி.மூர்த்தி, லயன் ஆர்.வீரக்குமார், போட்டோ செந்தில், மணலி பி.செல்வமணி, ஜி.தனசேகர், ஜி.யசோதா, சத்தியாபன்னீர்செல்வம், வி.விமலன், அகிலன், ஏழுமலை, எம்.ஜி.இளங்கோ, எம்.சி.சூர்யா ஆகியோரும் ஆர்.பானுமதி, கஸ்தூரிகாசி, எம்.வி.செல்வி, வீரராகவன், ஆர்.வேலு, மணிகண்டன், வி.ரமேஷ், ஆர்.ஜெயராமன், எம்.கீதா, செல்வராணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: