முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளுக்கு ISO உலகத்தரச்சான்று வழங்குதல்: அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

சனிக்கிழமை, 13 மே 2017      தர்மபுரி
Image Unavailable

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சிகளில் பொது சுகாதாரம்-திடக்கழிவு மேலாண்மை திட்டம், அலுவலக நிர்வாகம், குடிநீர் விநியோகம் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றின் சிறப்பான செயல்பாட்டிற்காக ISO உலகத்தரச்சான்று வழங்கும் விழா பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 13.05.2017ம் தேதியன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

ISO உலகத்தரச்சான்று வழங்கும் விழா

இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களும் தருமபுரி மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், கலந்துக்கொண்டு பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பொதுசுகாதாரம் மற்றும் அலுவலக நிர்வாகம் ஆகியவை சிறப்பான முறையில் செயல்படுத்திவரும் செயல் அலுவலர் பா.ஜலேந்திரன் அவர்களிடம் ISO தரச்சான்றினை வழங்கி பாராட்டி பேசினர்.

இந்நிகழ்ச்சியில் குவெஸ்ட் சர்டிபிகேஸன் (பி) லிமிடெட் (ISO தரச்சான்று) நிறுவன நிர்வாக இயக்குநர் பா.கார்த்திகேயன் அவர்கள் பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பொது சுகாதார பணிகள் ஆகியவை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருவதாகவும் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவில் துணை கலெக்டர் குப்புசாமி, பாலக்கோடு வட்டாட்சியர்கள் அதியமான் மற்றும் தமிழரசன், பாலக்கோடு பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சு.இரவீந்திரன், பாலக்கோடு மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago