காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் 200 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 85 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி : அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்

சனிக்கிழமை, 13 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram 2017 05 13

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து நலிவுற்ற நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு ப்ராஜெக்ட் திறமை என்ற திட்டத்தின் கீழ் பெப்சிகோ மற்றும் ஸ்மைல் அறக்கட்டளைகள் இணைந்து மாமண்டூர், நெல்வாய்சாலை, சாலவாக்கம், ஏபிசத்திரம் ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்கள் மூலமாக 12 கிராமங்களைச் சேர்ந்த நலிவுற்ற மகளிருக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு பெப்சிகோ மற்றும் ஸ்மைல் அறக்கட்டளைகள் சார்பில் 235 பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் இலவச தையல் இயந்திரங்களை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் வழங்கினர்

தாலிக்கு தங்கம்

ஸ்மைல் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் திரு சஞ்சீவ்தாம் கூறியதாவது, பெப்சிகோ அறக்கட்டளையுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொண்ட சமுதாய மேம்பாட்டுத் திட்டமானது மிகப்பெரிய சாதகமான நல்விளைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்.

பெப்சிகோ இந்தியாவின் சமுதாய பொறுப்புணர்வுப் பிரிவின் துணைத்தலைவர் பூனம்கெளல் கூறியதாவது , 1.4 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான அக்வஃபினா குடிநீரையும், 38 ஆயிரம் கிலோவுக்கும் கூடுதலான குவாக்கர் ஓட்ஸ் உணவுப் பொருளையும் வெள்ளம் ஏற்பட்ட தருணத்தில் பாதிக்கப்பட்டோருக்கு விநியோகம் செய்ததாகவும் பொருளாதார ரீதியாக அதிகாரமிக்கவர்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மாறியிருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றார்.

அமைச்சர்கள் கூட்டாக அளித்த பேட்டி. யுண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆந்திரா சென்றது திமுக ஆட்சியில் தான் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்றசாட்டு உண்மையில்லை எனவும் , போலி மதுபானம் தயாரித்து விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் . தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனை தீரும்வரை தாமரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க ஏற்கனவே தடை செய்துள்ளதாகவும், செங்கல்பட்டு பகுதியில் பெப்சிகோ பன்னாட்டு குளிர்பான நிறுவனம் செந்த முயற்சியில் தண்ணீர் எடுப்பதாகவும் பாலாற்றில் எடுப்பதில்லை எனவும் அமைச்சர் தங்கமணி உறுதி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: