முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ரூ.6 கோடியே 97 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது : திருவாரூர் மாவட்டத்தினர் தமிழக அரசுக்கு நன்றி

சனிக்கிழமை, 13 மே 2017      திருவாரூர்

மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மறைந்த மான்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு அறிவித்து செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

பல்வேறு திட்டங்கள்

தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பலவேறு திட்டங்களை அறிவித்து வெகு சிறப்பாக செயல்படுத்தி, 24 மணி நேரமும் கண்துஞ்சாது தமிழக மக்களின், ஏழை, எளியவர்களின் துயர்துடைக்க அயராது உழைத்து கொண்டுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல. மாற்றுதிறனாளிகளின் கல்விவளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பயிலும் மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்து பயன் பெறும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை, அரசு மறறும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கும், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவ, மாணவியருக்கு அரசு பொது தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெறுவோர்க்கு ரூ.50,000 –மும், 2ம் இடத்திற்கு ரூ.30 ஆயிரம், 3ம் இடத்திற்கு ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படுகிறது மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாணவ. மாணவியர்க்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் மாற்றுதிறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி வளர்ச்சியில சிறந்து விளங்கிட அதன் முலம் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவிடும் வகையில் அமைந்துள்ள முத்தாய்ப்பான திட்டங்களாகும்.

 கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட மாற்றுதிறனாளிகள் வேலைவாய்ப்பில் இடம் பெற மாற்றுதிறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குவதை கண்கானித்திட ஒன்றை அமைத்துள்ளார்கள் மான்புமிகு முதல்வர் இவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட பல்வேறு என்னிலடங்கா திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.திருவாரூர் மாவட்ட அளவில் மாற்று திறனாளிகளுக்கு செயல்படுத்த பட்ட நலத்திட்டங்களை விரிவாக காண்போம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு அவரவர் மாற்றுத்திறனின் தன்மை மற்றும் சதவீதத்திற்கு ஏற்ப ரூபாய் கோடிக்கு மேலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 27 ஆயிரத்து 880 நபர்களுக்கு மாற்றுத்திறாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இலவச பேருந்து பயணச்சலுகை 482 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மூன்றுச்சக்கர வண்டி,மடக்கு சக்கர நாற்காலி , இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், முடநீக்கு சாதனம்,ஊன்றுகோல் , செயற்கை கை, செயற்கை கால்,நவீன செயற்கை கால்,காதொலிக்கருவி,நவீன காதொலிக்கருவி, மடக்குக் குச்சி,கருப்புக் கண்ணாடி, பிரெயிலி கைகடிகாரம், பேசும் கைகடிகாரம் மற்றும் மோட்டார் பொருத்;திய தையல் இயந்திரம் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 123 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 366 மாணவர்களுக்கு ரூ.11 லட்சத்து 27 ஆயிரம் 2016-17ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. வாசிப்பாளர் உதவித்தொகையாக 22 மாணவர்களுக்கு ரூ.84 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 471 கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்ட 3070 மனவளர்ச்சி குன்றிய மற்றும் 73 தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வீதம் நிலுவைத் தொகை உட்பட ரூ.6 கோடியே 45 லட்சத்து 54 ஆயிரம் 2016-17 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட பூரண குணமடைந்தோருக்கு மாதம் ரூபாய் 1000 வீதம் 96 நபர்களுக்கு நிலுவைத் தொகை உட்பட ரூ.12 லட்சத்து 29 ஆயிரம் 2016-17 நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.ஆக மொத்தம் ரூ.6 கோடியே 97 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

திருவாரூர் வட்டம் கீழப்படுகையை சேர்ந்த சரஸ்வதி கூறுகையில்....எனது பெயர் சரஸ்வதி கஃபெ.முருகையன் நான் சுயதொழிலாக முறுக்கு மற்றும் அதரசம் வியாபாரம் செய்து வருகிறேன். எனக்கு சிறுவயதிலேயே இரண்டு கால்களும் நடக்க முடியாமல் ஊன்று கோல் மூலமும் வெளியிடங்களுக்கும் வியாபாரத்திற்கும் சென்று வந்தேன்.சில நேரங்களில் தொடர்ந்து ஊன்றுகோல் பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.அந்த நேரத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதை அறிந்து சென்று எனக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பம் வழங்கினேன்.என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று எனக்கு இணைப்பு சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டர் உணவுத்துறை அமைச்சர் கையால் பெற்றேன்.இதனால் எனக்கு சுயதாழில் செய்வது மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.என்போன்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவாரூர்; வட்டம் வயலூரை சேர்ந்த ராஜேஸ் கூறுகையில்....எனது பெயர் ராஜேஸ் . நான் தனியார் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.எனக்கு இரண்டு கால்களில் ஒரு கால் சிறுவயதிலேயே செயலிழந்து விட்டது. என்னால் மற்றவர்களை போல் வெளியிடங்களுக்கு செல்வதற்கு தயக்கமாகவும், இயலாமையாகவும் இருக்கும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூன்று சக்கரம் வாகனம் வேண்டி விண்ணப்பம் வழங்கினேன். என்னுடைய இயலாமையை கருத்தில் கொண்டு எனக்கு மூன்று சக்கரம் வாகனம் வழங்கினார்கள்.எனக்கு மூன்று சக்கரம் வழங்க ஆணைப்பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மஞ்சக்குடியை சேர்ந்த மாதவன் கூறுகையில் எனது பெயர் மாதவன்.நான் இரண்டு சக்கரம் வாகனம் பழுதுநீக்கும் சுய தொழில் செய்து வருகிறேன். எனது கால் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு நடக்கமுடியாமல் போனது.கடைக்கு செல்வதற்கு , வெளிஇடங்களுக்கு செல்வதற்கு மூன்று சக்கர மிதிவண்டி மூலம் சென்று வந்தேன்.ஆனால் அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.அந்த சமயத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் குறைத்தீர் கூட்டத்தில் மூன்று சக்கரம் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தேன். உடனடியாக எனக்கு மூன்று சக்கரம் ஸ்கூட்டர் வழங்கினார்கள். மாற்றுதிறனாளிகளுக்கு மூன்று சக்கரம் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்றேன்.

தொகுப்பு:-

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

திருவாருர் மாவட்டம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்