முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெம்பலூர் மாவட்டத்தில் அரசு மகளிர் விடுதிகள் தாய் வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது : பணிக்கு செல்லும் பெண்கள் தமிழக அரசுக்கு நன்றி

சனிக்கிழமை, 13 மே 2017      பெரம்பலூர்
Image Unavailable

தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா 14.5.2013 அன்று சட்டப்பேரவையில் மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் பெருநகரங்களில் பணிக்கு செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் அதிகமாக தேவைப்படுகின்றது என்பதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதியுடன் கூடிய விடுதிகள் சமுகநலத்துறையின் மூலம் ஏற்கனவே 6 மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், சென்னையில் இரண்டு இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. அதேப்போலவே திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 20 இடங்களில் பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.1.01 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டது. மேலும் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து இந்த விடுதி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் நான்கு ரோடு பகுதியில் முத்துலெட்சுமி நகரில் மகளிர் விடுதி தற்காலிமாக வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

 அதனை தொடர்ந்து இவ்விடுதிக்கான கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இணை இயக்குநர் கால்நடைபராமரிப்புத்துறை அலுவலகம் அருகில் ரூ.1.01கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சென்னை தiலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் (3.5.2017) அன்று திறந்து வைத்தார்கள்.

இவ்விடுதிகள் மூலமாக வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் மகளிருக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளைச் செய்து தரும் வகையில் அரசு விடுதிகள் ஏற்படுத்திட புரட்சித் தலைவி அம்மா உத்தரவிட்டிருந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் பெரம்பலூரில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதியை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். இவ்விடுதி தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய இந்த விடுதியில் பணிபுரியும் மகளிர் தங்கும் அறைகள், விடுதி காப்பாளர் அறை மற்றும் அலுவலகம் என்று 25 அறைகளும், சமையலறையுடன் இணைந்த உணவுக்கூடமும் என அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கூடிய வகையில் 663 .. பரப்பளவில் சிறப்புற இவ்விடுதி அமையப்பெற்றுள்ளது.

இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் பா.தீபா என்பவர் கூறியதாவது:எனது பெயர் பா.தீபா. எனது சொந்த ஊர் இராஜபாளையம் ஆகும். நான் பெரம்பலூர் தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். எனது தாய், தந்தையர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகின்றனர்;. இதுநாள்வரை நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றேன். ஆனால் இதுபோன்ற விடுதிகளில் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் போதுமானதாக இருப்பதில்லை. மேலும் உணவுக்கட்டணம் மற்றும் வாடகைக்கட்டணமும் அதிகமாகவே வசூலித்து வருகின்றனர். இதன்காரணமாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று நினைத்தாலும், வீட்டு வாடகை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் செய்வதறியாது மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தேன். இச்சமயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு மிகவும் சந்தோ~மடைந்தேன். இதன்மூலம் வெளியூரிலுள்ள எனது தாய், தந்தையரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இவ்விடுதியில் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான சூழலில் எனது தாய் வீட்டில் தங்குவதைப்போல் உணர்கிறேன். இதுபோன்று படித்த ஏழை நிலையிலுள்ள பெண்களின் துயர் களைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி நடக்கும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடுதியில் தங்கி பணிக்கு செல்லும் ~hருமதி என்பவர் கூறியதாவது: நான் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றேன். எனது ஊர் பக்கத்து மாவட்டமான அரியலூரில் உள்ளது. பணிநிமித்தமாக தினமும் எனது வீட்டிற்கு சென்று வருவது என்பது இயலாத காரியமாகும். எனவே இதுநாள் வரை எனது சொந்தக்காரர்கள் வீட்டிலும், தனியார் மகளிர் தங்கும் விடுதியிலும் தங்கி பணிக்கு சென்றேன். தனியார் விடுதிகளில் வாடகை மற்றும் உணவிற்காக மாதம் ரூ.6500- வரை செலவாகிறது. இது எனது சம்பளத்திற்கு போதுமானதாக இல்லை. இதன்காரணமாக நான் சம்பர்திப்பது அனைத்தும் இவ்விடுதிக்கே செலவாகின்றது. இதன்காரணமாக எனது சொந்த தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தசமயத்தில்தான் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்கள் என்பதை கேள்விப்பட்டு எனக்கும், எனது பெற்றோருக்கும் மிகவும் நிம்மதியானது. இவ்விடுதியில் தங்குவதினால் அதிக செலவில்லாமல் சிறிது சேமிக்க முடிகிறது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் தேவையான அத்தியாவசி தேவைகளை எனது சம்பளத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ளமுடிகிறது. இவ்விடுதியில் சுத்தமான, இயற்கையான, சுவையான உணவுகள் வழங்கப்படுகிறது. இங்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதால் எனது பெற்றோரும் நிம்மதியாக என்னை பணிக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். ~;டப்பட்டு முன்னுக்கு வரவேண்டும் என தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும், சுமையை குறைக்கவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தினை வழி நடத்தும் தமிழக அரசிற்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு தெரிவித்தார்.

தொகுப்பு:

.பாவேந்தன்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

பெரம்பலூர் மாவட்டம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்