முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்னிலம் பேரூராட்சியில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் காமராஜ் வழங்கினார்

சனிக்கிழமை, 13 மே 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் 622 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரத்து 756 மதிப்பிலான பல்வேறு அரசு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி தலைமையேற்க,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகித்தார்.

நலத்திட்ட உதவிகள்

இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது....பல்வேறு அரசு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.இந்நிகழ்ச்சியின் மூலம் ஏழை, எளிய பாமர மக்களுக்கு எல்லா காலத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு உறுதுணையாக இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.மேலும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஒரு கல்லூரி வேண்டும் என்ற 60 ஆண்டு கால கோரிக்கையையும், வலங்கைமானில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றிய தலைவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா ஒருவர் மட்டுமே.

வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாடு மக்களை சென்றடையாமல் பாதுகாத்து வருகிறது..எனவே இந்த அரசு உங்கள் தேவைகளை அறிந்து நிறைவேற்றி எல்லா காலமும் உறுதுணையாக இருக்கும். இன்றைய தினம் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண உதவிதொகை ,இறப்பு நிதி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா,புதிய மின்னணு குடும்ப அட்டை, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை, நன்னிலம் பேரூராட்சிக்கு சுகதார வளாக மினிலாரி, வேளாண்மைத்துறையின் மழைத்தூவான்கள், எலி மருந்து மற்றும் இடுப்பொருட்கள் தாட்கோ மூலம் மினி லோடு ஆட்டோ வாகனம் என மொத்தம் 622 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 22 லட்சத்து 35 ஆயிரத்து 756 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இந்நலத்திட்ட உதவிகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி,மாவட்ட வழங்கல் அலுவலர் இருதயராஜ் , பேரூராட்சி செயல் அலுவலர் செந்திலன், நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இராம குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பு, வட்டாட்சியர் பிரித்விராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago