முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்களை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன் ஆய்வு

சனிக்கிழமை, 13 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி தீரன் நகர் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து கழக அலுவலர் (பொ) தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதிகாரி ஆய்வு

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேற்கு வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு உட்பட்டு 227 பள்ளி வாகனங்கள் உள்ளன. இன்று 187 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர காலவழிகளில் குறைபாடு, டயர் மற்றும் பிரேக் குறைபாடு, தடையின் திறன் ஆகியவற்றில் குறைபாடு உள்ள 16 பள்ளி வாகனங்களின் அனுமதி தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிரு~;ணன், வட்டார போக்குவரத்து கழக ஆய்வாளர்கள் கருப்பசாமி, நல்லதம்பி, பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்