முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு 84 பள்ளிகள் 100% தேர்ச்சி

சனிக்கிழமை, 13 மே 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 23 அரசுப் பள்ளிகள் உள்பட 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.ஈரோடு வருவாய் மாவட்டத்தில் 90 அரசுப் பள்ளிகள், 6 நகரவைப் பள்ளிகள், 12 நிதி உதவிப் பள்ளிகள், 24 சுயநிதிப் பள்ளிகள், 74 மெட்ரிக் பள்ளிகள், ஆதி திராவிடர் பள்ளி என 207 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 890 மாணவர்கள்,  14 ஆயிரத்து 93 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 983 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர். இதில், 12 ஆயிரத்து 311 மாணவர்கள், 13 ஆயிரத்து 777 மாணவிகள் என 26 ஆயிரத்து 88 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில், 23 அரசுப் பள்ளிகள், 5 நிதி உதவிப் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் பள்ளி, 51 மெட்ரிக் பள்ளிகள், 4 சுயநிதிப் பள்ளிகள் என 84 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்