முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் எல்லை வாகாவில் 107 அடி உயர தேசிய கொடி பறக்கவிடப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

வாகா : இந்தியா- பாகிஸ்தான் அட்டாரி வாகா எல்லையில் 107 அடி உயரமுள்ள மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதனை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பறக்கவிட்டார்.

இந்திய - பாகிஸ்தான் நாடு களுக்கு இடையிலான முக்கிய மான வழித்தடமான வாகா எல்லையில் உள்ள அட்டாரி பகுதியில் மிகப் பெரிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரமாண்டமான 107 அடி உயரமுள்ள இந்திய தேசியக் கொடிக்கொடியை ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கொடியை ஏற்றி வைத்தார்.

சாவடியில் ஸ்கேனர்

அதன்பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

வாகா எல்லையில் பாது காப்பு நிலவரம் தொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தி னேன். எல்லைப் பகுதி வழியாக இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான பிரச் சனைகள் பற்றி வர்த்தகர்களுடன் விரைவில் பேச்சு நடத்துவேன். பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை ஆய்வு செய்ய சோதனைச் சாவடியில் “ஸ்கேனர்” நிறுவப்படும்.
காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கல் எறியும் கும்பலை பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஒருசிலர் “வாட்ஸ் அப்” குழுக்கள் மூலம் வழி நடத்துகின்றனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.

பாகிஸ்தான் ராணுவத்தால் எல்லையில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago