முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,500 கோடிக்கு ஹவாலா மோசடி: ஆந்திராவில் முக்கிய குற்றவாளி கைது

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்கத்தா வழியாக ரூ.1,500 கோடிக்கு ஹவாலா பண மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் போலீஸ் இணை ஆணையர் நவீன் குலாட்டி கூறும்போது, ‘‘வெளிநாட்டில் இருந்து ரூ.680 கோடி ஹவாலா பணம் பெறப்பட்டிருப்பதை அண்மையில் கண்டுபிடித்தோம். அதில் ரூ.569 கோடி போலி ஆவணங்கள் மூலம் இங்கிருந்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைக் கப்பட்டவை. இவை அனைத்தும் கறுப்புப் பணம். ஹவாலா மோசடிக்காக 30 போலி நிறுவனங் கள் உருவாக்கப்பட்டு, அதன் பெயரில் போலி வங்கி கணக்கு களும் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வங்கி கணக்குகள் மூலம் வரி கட்டாமல் கோடிக்கணக்கில் வெளிநாடுகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். சில வங்கி அதிகாரிகளின் உதவியுடன் ரூ.1,500 கோடி வரை ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த வட்டி நிவாச ராவின் மகன் வட்டி மகேஷ் தான் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி என போலீஸார் தெரிவிக்கின்றனர். இவரை விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகேஷை தவிர கொல்கத்தாவை சேர்ந்த சிலருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாகப்பட்டினம் போலீஸார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரிப்பதற்காக கொல்கத்தா விரைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago