முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் 72 பயனாளிகளுக்கு ரூ.11.28 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வீட்டுமனை பட்டா

இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் கலந்து கொண்டு விலையில்லா வீட்டு மனைப்பட்டா 28 பயனாளிகளுக்கும், விலையில்லா தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகளும், வருவாய்த் துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மாதாமாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணையும், சமூக நலத்துறையின் மூலம் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் வைப்புத் தொகைக்கான ஆணையும், தோட்டக்கலைத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு கைத்தெளி;ப்பான், ரெயின்கன் (சுயiபெரn) என ரூ.1,12,000 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை மூலம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் உளுந்து சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற 1நபருக்கு ரூ.15,000த்திற்கான காசோலையும், மழை தூவி 100 சதவிகித மானியத்துடன் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.31,500 மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளும், 5 பயனாளிகளுக்கு ஏரி, குளங்களில் மண் எடுப்பதற்கான ஆணையும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,

தஞ்சாவூர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் குந்தவை நாச்சியார் அரசினர் கலைக்கல்லூரி ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. சுகாதாரத்துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 102 ஆம்புலென்ஸ் இலவச தாய்-சேய் சேவை ஊர்தியை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 5, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 2ம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 1ம், 2 வாகனங்கள் தயார் நிலையிலும் என மொத்தம் பத்து 102 ஆம்புலென்ஸ் தாய் சேய் வாகனம் இன்றைய தினம் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

பாலம் கட்டும்பணி

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்;ட மேலகளக்குடி கிராமத்தில் வெண்ணாற்று பாலம் குறுக்கே இரு கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஒப்பந்தகாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.11.60 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணிகளும், ரூ.28.20 இலட்சம் மதிப்பீட்டில் மயான சாலைக்கு பேவர் ப்ளாக் கல் அமைக்கப்படவுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அருந்தவபுரம்-திருப்பாலத்துறை கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடக மேடை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.இது போன்ற திட்டங்கள் மூலம் பொது மக்கள் அதிக அளவில் பயன் பெறுவது அம்மா அரசு ஆட்சிக்காலத்தில் தான். எனவே இது போன்ற திட்டங்கள் என்றென்றும் கிடைப்பதற்கு இந்த அரசுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.

முன்னதாக, இராஇராமுத்திரக்கோட்டையில் நல்லவன்னியன்குடிகாடு பஞ்சாயத்து, சங்கரதேவன் குடிகாடு, வடபாதி, சாலியமங்கலம், சுந்தரபெருமாள் கோவில் ஆகிய இடங்களில் ரயில்வே கேட் உள்ளது. இந்த இடங்களில் சுரங்க பாதை அமைப்பதற்கான இடத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் தஞ்சாவூர் ரயில்வே துறை கோட்ட பொறியாளர்கள் பாஸ்கர், சதாசிவம் ஆகியோர்களுடன் இன்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.மோகன், அம்மாப்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சூரியநாராயணன், பாபநாசம் முன்னாள் ஒன்றியத் தலைவர், கோபிநாத், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.மணி, மாவட்ட சமூக நல அலுவலர் பாக்கியலெட்சுமி, வட்டாட்சியர் ராணி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க பிரதிநிதிகள் ராஜமாணிக்கம், முத்துக்குமார், அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்