முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் 65 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் பங்கேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையில் 65 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா வரும் 21ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் மலேசியா இளைஞர் விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். திருவண்ணாமலை ஸ்ரீ தண்டபாணி ஆசிரமம் மற்றும் மலேசியா தேசம் பத்திரிகை இணைந்து வழங்கும் தேசம் மீடியாவின் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா தி.மலை தண்டராம்பட்டு பிரதான சாலையில் உள்ள ஸ்ரீநிதி மகாலில் வருகிற 21ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

விருது வழங்கும் விழா

இவ்விழாவுக்கு வருகைதரும் அனைவரையும் ஜோதிட ரத்னா டாக்டர் எல்.சீனுவாசன் வரவேற்க, ஸ்ரீ தண்டபாணி ஆசிரம பீடாதிபதி வாலைச்சித்தர், தேசம் குணாளன் மணியம் , கோவை வேளாண் விஞ்ஞானி டாக்டர் வி.பிரகாசம், எம்.பாலகிருஷ்ணன், எஸ்.டெல்லிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மலேசியாவை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் குளோ ஆசியா கல்லூரி தோற்றுநர் ஐயப்பன் முனியாண்டி, டியூன் ஸ்கில்ஸ் கல்லூரி தலைவர் டத்தோ ரவீன், தொழிலதிபர்கள் டாக்டர் ஆர்.குப்புசாமி, ஷாபுடின் , எம்ஜிஆர் தேவன், கோபால் ராமநாயுடு, குமரன் அடைக்கலம், என்.எம்.ஸ்ரீவிக்னேஷ், சரஸ்வதி பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்த விழாவுக்கு தலைமையேற்று மலேசியா இளைஞர் விளையாட்டு துணை அமைச்சரும் மலேசிய நாம் அறவாரியத்தின் தோற்றுநருமான டத்தோ எம்.சரவணன், விவசாயம், விளையாட்டு , கல்வி போன்ற துறைகளில் சாதனை புரிந்த 65 பேருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார் அதனைத் தொடர்ந்து அவர் தேசம் பவுண்டேஷனை துவக்கிவைத்து ஏழை எளியோர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம், புத்தகதானத்தையும் வழங்கி தேசம் பத்திரிகை ஆரம்ப விழாவை துவக்கிவைக்கிறார். பின்னர் புதியதாக சாரா டீ, கேனா காபி, ஹெர்பல் ஆயில், ஆகியவற்றை வெளியிட்டு வழங்குகிறார். இந்த விழாவையட்டி பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் தேசம் பத்திரிகை உதவி ஆசிரியரும் ஜோதிட ரத்னாவுமான டாக்டர் எல்.சீனுவாசன், பி.செந்தில்குமரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்