முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் குளம், கன்மாய் மணல் அள்ள அனுமதி கோரி 317மனுக்கள் வந்தன

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      வேலூர்

 

அரக்கோணம் சுற்றியுள்ள் குளம், கன்மாய் மணல் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து 317 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், சுற்றியுள்ள 13 தாலுக்காக்களில் 974 குளம் மற்றும் கன்மாய்கள் உள்ளது. இந்த குளம் மற்றும் கன்மாய் இடங்கள் பொது பணித்துறையின் கீழும், சில ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

கோரிக்கை மனு

 

இந்த குளம் மற்றும் கன்மாய் இடங்களில் உள்ள அதிக அளவிலான சவுடு மணல்களை பொதுமக்கள், விவசாயிகள், மற்றும் மண்பான்டம் செய்பவர்கள் வரையில் யாருக்கு மணல் தேவை உள்ளதோ அவர்கள் கோரிக்கை மனுக்களாக கொடுக்கும்படியும் அதற்கான சிறப்பு ஒரு நாள் முகாம் நேற்று 13ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும், மணல் கோரும் விவசாயி நஞ்சை நிலம் வைத்திருப்பவராக இருந்தால் ஒரு எக்கருக்கு 12 லாரி அளவிலும். ஹெக்டேர் நிலபரப்பிற்கு 30 லாரி அளவிலும் எடுத்துக் கொள்ளலாம். அதுபோல் புஞ்சை நில விவசாயிக்கு ஒரு எக்கருக்கு 15 லாரி அளவிலும். ஹேக்டேர் அளவு நிலபரப்பிற்கு 37 லாரி அளவிலும் சவுடு மணல் எடுத்துக் கொள்ளலாம். அதுபோல் பொதுமக்கள் தரப்பில் 5 லாரியும். மண்பாண்டம் செய்யும் தொழிலாளிக்கு 10 லாரி அளவும் நிர்ணயம் செய்யபட்டு இருக்கிறது.

இந்த சவுடு மணல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அரசு கட்டணம் எதையும் நிர்ணயம் செய்யவில்லை. நேற்று முன் தினம் அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில இதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது அனைத்து கிராம அதிகாரிகள் 317 வரையில் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.இம்மனுக்கள் மீது கிராம அதிகாரிகள் ஆய்வு செய்தபின் மாவட்ட கனிமத்துறைக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரியவருகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago