முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசூர் நகராட்சி 41வது வார்டு பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி 41- வார்டு குடியிருப்பு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விகாஸ் நகர் அனைத்து குடியிருப்போhர் நல சங்கத்தின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் நேற்று (14.05.2017) திறந்து வைத்து நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார்.

அமைச்சர் பேச்சு

அமைச்சர் உரையாற்றும் போது: மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று நல்லாட்சி செய்து மறைந்தும் மறையாமல் மக்கள் மனத்தில் நிலைத்து நிற்;கும் முதலமைச்சர் அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து வருகிறது. அதனடிப்படையில் ஓசூர் நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சாலைகள், பூங்காக்கள், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ஓசூர் நகரின் குடிநீர் ஆதாரமாக திகழும் ராமநாயக்கன் ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வாரி பொதுமக்களுக்கு பொழுது போக்கு அம்மசங்களுடன் கூடிய பூங்கா நடைபாதை, தியானமண்டபம், அமைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று விகாஸ்நகர் நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ரூ. 7 - லட்சம் மதிப்பில் புதியதாக நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிக்கு சுற்று சாலைகள் ,கழிவு நீர் கால்வாய்கள், ஒரே சீரான மின்சார கம்பம் அமைத்தல், சீரான குடிநீர் வினியோகம் போன்ற கோரிக்கைகளை விகாஸ்நகர் குடியிருப்போர் சங்கம், எஸ்.எம்.நகர் குடியிருப்போர் நல சங்கம், அன்னை நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றி தரப்படும். விகாஸ் நகர் பூங்கா நகராட்சி சார்பில் ரூ. 5 - லட்சம் நிதி ஒதுக்கி உட்கட்டமைப்பு வசதி செய்து தரப்படும். இப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த தலைவர்கள், அறிவியியல் ஆராட்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய வீரர்கள் என 50 - க்கு மேற்பட்ட தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது சிறப்பு குறியதாகும். இந்த நூலகத்தை பொதுமக்கள் , மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் கேட்டுக்கொணடார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பூசனகுமார், நகராட்சி பொறியாளர்கள் குருசாமி, கண்ணன், ரோட்டரி கிளப் தலைவர் வாசுதேவன், குடியிருப்போர் நல சங்க செயலாளர் ஏ.மல்லேஷ், நிர்வாகிகள் வி.கிரிபிரசாத், ஆர்.பாலு, எச்.ஆர்.எஸ். மணி, எம்;. சரவணன், ஆர்.ராமசந்திரன், அசோக்குமார், மற்றும் ஜெகதீசன், மாதேவா, ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்