முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரியில் ஆர்.எஸ்.எஸ். பண்பு பயிற்சி முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      தர்மபுரி
Image Unavailable

 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய 40 வயது மேற்பட்டவர்களுக்கான கோடைகால 20 நாள்கள் பண்புப் பயிற்சி முகாம் தருமபுரி விஜய் வித்யாலயா பள்ளியில் நடந்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தம் ‘மகா சேவா நிகழ்ச்சி’ ஆர்.எஸ்.எஸ். – மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். முகாம் வரவேற்புக் குழு தலைவர் மற்றும் விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் அவர்கள் தலைமை ஏற்க, விஜய் வித்யாலயா தாளாளர் டி.என்.சி. இளங்கோ அவர்கள் முன்னிலை வகிக்க, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் ‘தூய்மை தருமபுரி’ வாழ்த்துரை வழங்கி பேருந்து நிலைய தூய்மை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அமைச்சர் பங்கேற்பு

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தி பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்ச்சியை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகள் தோறும் மேற்கொண்டதாகவும், இதை நகராட்சி துப்புரவுப் பணியாளர்தான் மேற்கொண்டதாகவும், ஆனால் தற்போது மேற்கொள்ளும் தூய்மைப் பணியானது தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் கலந்து கொள்ள வந்திருக்கின்ற (பள்ளி தாளாளர், சார்ட்டட் அக்கவுன்டன்ட், மருத்துவர், வியாபாரிகள் போன்ற) ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நம் நகரை தூய்மைப்படுத்த முனந்திருப்பது பாராட்டுக்குரியது. இதில் பொதுமக்களும் பங்கெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிராந்த சேவா ப்ரமுக் இராம. இராஜசேகர் சிறப்புரையாற்றினார். தென்பாரத ஆர்.எஸ்.எஸ். உடற்பயிற்சி பொறுப்பாளர் ஓ.கே. மோகன், ஆர்.எஸ்.எஸ். முகாம் அதிகாரி சங்கர் லால், முகாம் செயலாளர் மோகன், முகாம் பொறுப்பாளர் சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர், அதிமுக முன்னாள் நகர செயலாளர் வெற்றிவேல் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்க துணைத் தலைவர் சக்திவேல், சிக்மா பயிற்சி மையத்தினர் கலந்துகொண்டனர்.

நிறைவாக ஆர்.எஸ்.எஸ். தருமபுரி மாவட்டத் தலைவர் கே. கோவிந்தராஜ் நன்றியுரை கூற, தேசிய கீதத்துடன் ‘தூய்மை தருமபுரி’ நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்துகொண்டுள்ள ஸ்வயம்சேவகர்கள் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்