முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துனர்கள் பொது வேலை நிறுத்த போராட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த கலெக்டர் ச.ஜெயந்தி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் 15.05.2017 முதல் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி, ,  தலைமையில் நடைபெற்றது.

அனைத்து பேருந்துகளும் இயக்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், 15.05.2017 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தினை முன்னிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டும், அனைத்து பேருந்துகளை இயக்க ஏதுவாக  கூடுதல் பணியாளர்களின் பட்டியலைப் பெற்று வைத்தல் வேண்டும். போராட்ட தினங்களில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறித்தும், எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகமாக பயணம் செய்யக்கூடும்  என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப பேருந்துகளை இயக்க பட்டியலிடப்பட்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகளில் இருப்பின் அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சார் கலெக்டர் / வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்து தகுந்த பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு பணிமனைகளிலிருந்தும் வெளியேறும் பேருந்துகளுக்கு  பாதுகாப்பு அளிக்க எவ்வளவு காவலர்கள் தேவைப்படும் என்பதை ஒருங்கிணைத்து முன்கூட்டியே காவல்துறை உயர் அலுவலர்களிடம்  வழங்கப்பட வேண்டும். வேலை நிறுத்த தினங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு போதுமான அளவில்  எரிபொருள்  இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும், பேருந்துகளில்  எரிபொருள் போதுமான அளவில் நிரப்பப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து வழித்தடங்களும் விடுபடாமல் போதிய அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், (திருப்பூர் தெற்கு / வடக்கு/ தாராபுரம்) இப்போராட்ட நாட்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் சரியாக இயக்கப்படுகிறதா என்பது குறித்தும், கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் விதிமுறை மீறல்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக  பொதுமக்கள் நலன் கருதி அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்கும் வண்ணம்  கனரக வாகனங்களை இயக்க போதிய அனுபவம் பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்  பெயர் பட்டியலினை ழுரவ ளழரசஉiபெ மூலம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நகர பேருந்துகள் மூலம் தினசரி காய்கறிகள்

மேலும், உதவி இயக்குநர், தமிழ்நாடு வேளாண்மை விற்பனைக்கூடம்,  வேலை நிறுத்தப் போராட்ட நாட்களில் பேருந்துகள் மூலம் நகரங்களுக்கு பேருந்துகள் மூலம் தினசரி  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யும் பேருந்து வழித்தடங்களைக் கண்டறிந்து  அது குறித்த விபரத்தினை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட மேலாளருக்கு  வழித்தடம் மற்றும் நேரம் குறிப்பிட்டு பட்டியல்  அளிக்குமாறும், காய்கறிகள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல ஏதுவாக உரிய முன்னேற்பாடுகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

பேருந்து குறித்த பட்டியல்

காவல்துறையினர் வேலை நிறுத்த நாட்களில் பேருந்துகளை இயக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், பணிமனைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வித அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தவிர்க்கவும், பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எவ்வித பிரச்சினையும் மற்றும் இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் மற்றும் கிளை மேலாளர்கள் ஆகியோர்களிடம் இயக்கப்படும் பேருந்துகள் குறித்த பட்டியல்களை பெற்று தேவைப்படும் பேருந்துகள் மற்றும் இடங்களில் போதிய அளவில் காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கௌள வேண்டும். முன்கூட்டியே தேவைப்படும் அளவில்  காவலர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும்

வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும்  பேருந்துகளுக்கு சேதம் ஏற்படுத்தா வண்ணம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்குமாறும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசு பேருந்து பணிமனைகள் மற்றும் சாலைகளில் ஏதேனும் இடையூறுகள் மற்றும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் வேலை நிறுத்த நாட்களில் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க சிறப்பு செயல் நடுவர்களை 14.05.2017 பிற்பகல் முதல் நியமனம் செய்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்தல் வேண்டும். மேற்கண்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனைத்து தொடர்புடைய அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொது மக்களுக்கு எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா, இ.கா.ப, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சார் கலெக்டர் ஷ்ரவன்குமார், , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல்துறை, போக்குவரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்