முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரிக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான அடல் பிகாரி வாஜ்பாய் விருது

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரிக்கு சிறந்த கண்டுபிடிக்கான பாரத ரத்னா பாரத ரத்னா அடல்பிகாரி பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.                         

பசியை தூண்டும் மருந்து 

இந்திய மக்களின் மூலிகை மருத்துவத்தின் தேவைகளை அறிந்து இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க டேப்லட் இந்தியா சென்னை மக்களின் அத்தியாவசிய தேவைகளை
அறிந்து புதிய மருந்து பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக ஜெ.எஸ்.எஸ்.கல்லூரியை அணுகியது. அதன்பேரில் ஜெ.எஸ்.எஸ்.மருந்தாக்கியல் கல்லூரியின் கேர்துறை இரண்டு விதமான மருந்துகளை இந்திய வர்த்தகத்தில் அறிமுதப்படுத்த நினைத்தது. அதில் ஒன்று இயற்கையாக பசியை தூண்டக்கூடிய மருந்தையும், தூக்கமின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு நினைவூட்டலை அதிகப்படுத்த ஒரு மருந்தையும் என இரண்டு மருந்துகளை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு மருந்துகள் தொழிற்துறையின் கருத்துக்களையும், இந்திய வர்த்தகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டது. இந்த மருந்தினை உற்பத்தி செய்த ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரிக்கு பரதரத்னா அடல்பிகாரி வாஜ்பாய் விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது

அதன்பேரில் கடந்த 11_ந் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருதினை ஜெ.எஸ்.எஸ்.கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால், கேர் மையத்தின் இயக்குநர் முனைவர் நஞ்சன், லேப்லட் இந்தியா சென்னை மருந்து உற்பத்தி மையத்தின் தலைவர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற கல்லூரி நிர்வாகத்திற்கு மருந்தாக்கியல் துறையினர் பாராட்டிகளை தெரிவித்தனர்.  இத்தகவலை கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்