முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்தொட்டிகள் அடுக்கும் பணி

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121_வது மலர்காட்சிக்காக மலர்தொட்டிகள் அடுக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார்.

மலர்தொட்டிகள் அடுக்கும் பணி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6_ந் தேதி முதல் கோடை விழா நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 19_ந் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதனையொட்டி பூங்கா மலர்காட்சித்திடலில் வண்ண மலர்தொட்டிகள் அடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி தொட்டிகள் அடுக்கும் பணிகளை தொடங்கி வைத்தபின்
செய்தியாளர்களிடம் கூறியதாவது

15 ஆயிரம் மலர்தொட்டிகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121_வது மலர்காட்சி வரும் 19_ந் தேதி முதல் 21_ந் தேதி முடிய வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு இன்று(நேற்று) மலர்காட்சித்திடலில் வண்ண மலர்தொட்டிகள் அடுக்கி வைக்கு பணி துவங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சிறப்பம்சமாக 15,000 மலர்தொட்டிகளில் ஓரியண்டல்லில்லி, ஏசியாடிக்லில்லி, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், ஆஸ்டர், பால்சம், க்ரைசாந்திமம், வெர்பினா, ஆன்டிரைனம் போன்ற 200 ரகங்கள் பொதுமக்களின் பார்வைக்கு விருந்தாக அடுக்கி வைக்கப்பட உள்ளது.

கண்களுக்கு குளிர்ச்சி

மலர்காட்சிக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தும்மனட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து ரக கார்னேசன் மலர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் புதுப்பூங்காவில் 6,000 பல வண்ண மலர்தொட்டிகள் கண்ணிற்கு குளிர்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மலர்காட்சியினை கண்டுகளித்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

அப்போது தோட்டக்கலை இயக்குநர்(பொ) அனந்தகுமார்,  இணை இயக்குநர் மணி, துணை இயக்குநர்கள் சிவசுப்பிரமணியம், உமாராணி, பூங்கா உதவி இயக்குநர்(பொ) ஸ்ரீ வித்யா, தோட்டக்கலை அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், வித்யா மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago