முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்மலைக்கு கள்ளழகர் திரும்பினார்.

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      மதுரை
Image Unavailable

  அழகர்கோவில்,- திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைண ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். இந்த விழாவானது கடந்த 6ந் தேதி தொடங்கியது. 8ந் தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடானார். தொடர்ந்து மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. 10ந் தேதி சித்திரை திருவிழாவின் சிகரமாக தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி இறங்கினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்த சேஷ வாகனத்தில் தேனு£ர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம¢ தீர்த்து காட்சி தந்து அழகர் அருள்பாலித்தார். அன்றிரவு விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 13ந் தேதி பின்னிரவு பூப்பல்லக்கு விழா நடந்தது. தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவில் முன்பிருந்து திருமாலிருஞ்சோலைக்கு பிரியா விடை பெற்று கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் வந்த வழியாகவே சென்றார். நேற்று முன் தினம் இரவு அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி காட்சி தந்தார்.

    நேற்று 14ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அழகர்கோவில் கோட்டை வாசலை சுவாமி வந்தடைந்தது. தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் சுவாமி சென்றது. அப்போது ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வண்ண மலர்களால் கள்ளழகரை மலர் து£வி வரவேற்றனர். தொடர்ந்து 18 பெண்கள் திருஷ்டி பூசண¤க்காயில் கற்பூரம் ஏற்றி அழகர் வந்த தங்க பல்லக்கை மூன்று முறை வலம் வந்து திருஷ்டி கழித்தனர். அதன்பின் காலை 11,15 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கல்யாண சுந்தரவல்லி கோவில் யானை முன் செல்ல கள்ளழகர் பக்தர்கள் கூட்டத்தில் மிதந்து கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார். இந்த திருவிழாவில் மதுரை வரை 26 உண்டியல் பெட்டிகள்  பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக சுவாமியுடன் சென்று திரும்பியது. மேலும் 433 மண்டகபடிகளில் அழகர் எழுந்தருளியுள்ளார். இந்த விழாவில் தென்மாவட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர்கோவிலுக்கு கார், வேன் மற்றும் பஸ் போன்ற வாகனங்களில் வந்து குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மேலு£ர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் செல்வம் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்