மே 21 மற்றும் 28 ல் 3வது விஜய் தொலைக்காட்சி விருது

திங்கட்கிழமை, 15 மே 2017      சினிமா
D D priyatharsini-gopinath

Source: provided

தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ‘விஜய் தொலைக்காட்சி விருதுகள்’ புது பொலிவுடன் ‘3வது விஜய் தொலைக்காட்சி விருதுகளாக’ இம்மாதம் 6ஆம் தேதி அதாவது சென்ற சனிக்கிழமை அன்று, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு பிரம்மண்டமாக அரங்கேறியது. விஜய் தொலைக்காட்சி பெரிய திறமைகளை கொண்டாட தவறியதேயில்லை.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுபோன்ற தனிச்சிறப்புவாய்ந்த சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி பறைசாற்றியது. இம்முறை ரசிகர்கள் தங்களுடைய விருப்பமான சின்னத்திரை நட்சத்திரங்களை, வெள்ளித்திரை பிரபலங்கள் கௌரவப்படுத்தப்படுவதைக் காண முடியும். சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நாடகம், சிறந்த நிகழ்ச்சி, சிறந்த குடும்பம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி, சிறந்த நகைச்சுவை நடிகர் (Fiction) மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் சிறந்த மாமியார், சிறந்த துணை நடிகர் (ஆண் மற்றும் பெண்), சிறந்த தொகுப்பாளினி (ஆண் மற்றும் பெண்) என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் ஒரு பிரிவாக பார்வையாளர்களை குதூகலப்படுத்த பற்பல நிகழ்ச்சிகள் சின்னத்திரை நட்சத்திரங்களால் அரங்கேற்றப்பட்டது. இவற்றுள் பிரபல நடிகர் டி. ராஜேந்தர் அரங்கை அதிரவைத்த அதிரடியான இசை நிகழ்ச்சி, சின்னத்திரை பிரபலங்கள் செந்தில்-ஸ்ரீஜா தம்பதியரின் நடனம், சரவணன் மீனாட்சி புகழ் நடிகை ரட்சித்தாவின் நடனம் மற்றும் தொகுப்பாளினிகள் ரம்யா, பாவனா, நடிகை சிந்து ஷியாம் ஆகியோர் இணைந்து வழங்கிய ஆட்ட நிகழ்ச்சி ஆகியவை அக்கோலாகலமான நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. அதுமட்டுமின்றி கலக்கப்போவது யாரு குழுவினர் தங்களது நகைச்சுவை காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தினார்.

விஜய் டி.வி.யின் இளைய நடன திறமைகளான ஹீத், ரித்வா, ஆலேனா, சாண்ட்ரா மற்றும் இக்ஷ்தா தங்களது இனிய நடனத்தால் பார்வையாளர்களை கவர்ந்தனர். தெய்வம் தந்த வீடு தொடரின் அழகிய நடிகை மேகனா காதல் மற்றும் மெல்லிசை பாடல்களுக்கு அழகான நடனத்தை வழங்கினார். மேலும், உங்களது அபிமான நட்சத்திரங்கள் விருது வென்றார்களா என தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதா . விரைவில் 3 வது விஜய் தொலைக்காட்சி விருதுகள் மே 21 மற்றும் மே 28 அன்று ஒளிப்பரப்படுகிறது. எனவே இந்நிகழ்ச்சியை அவசியம் காணத்தவறாதீர்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்: