முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திராவிட அரசியலை தமிழக மக்கள் தூக்கிப் போடமாட்டார்கள்; நடிகர் கமல்ஹாசன்

திங்கட்கிழமை, 15 மே 2017      சினிமா
Image Unavailable

சென்னை : அரசியல் குறித்து அதிகம் பேசாமல் சினிமா, நடிப்பு குறித்து அதிகம் பேசி வந்த நடிகர் கமல் ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்து அதிகம் பேசி வருகிறார். குறிப்பாக திராவிடத்தை விட்டுக் கொடுக்காமல் அதில் உள்ள நியாயமான வரலாற்று சான்றுகளை எடுத்துக் கூறி பேசி வருகிறார்.

இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழகம் எதற்காக தலைவர்களை எதிர்ப்பார்க்க வேண்டும். தலைவர்களை தேடுவது கட்சிகளின் வேலை. மக்கள் நல்ல தேர்தல் அறிக்கைகளையும், சிறந்த நிர்வாகத்தையும் தான் எதிர்ப்பார்க்க வேண்டும். கட்சிகள் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்பதில்லை. காந்தி காலத்தில் இருந்து நாம் ஆளுமைகளை மட்டுமே பார்க்கிறோம். காந்தியை பிடித்துப் போய் மக்கள் அவர் பின்னால் சென்றார்கள்.

தேசிய கொடி

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. மத்தியில் ஆள்பவர்கள் தமிழகத்தை கவனித்தாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை தேசியக் கொடியை நான் வணங்குகிறேன். மற்ற நிறங்கள் எனக்கு பெரிதாகப் படுவதில்லை. அவைகள் எல்லாம் வானத்தில் வந்து மறையும் மேகங்கள்.

திராவிட அரசியல்

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலை பாஜக பயன்படுத்த முயல்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டு காலமாக உள்ள திராவிட அரசியலை தமிழக மக்கள் தூக்கிப் போடமாட்டார்கள். அது ரொம்ப கஷ்டம்.

திராவிடர்கள் என்பது தமிழகத்திற்கு இன்னும் தொடர்புடைய ஒன்றாகவே இருக்கிறது. நான் இதை அரசியலாக சொல்லவில்லை. தொன்மம் வாய்ந்த இனக் குழு மக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தொல்லியல் ஆய்வு மற்றும் இன அடிப்படையிலான சான்றுகள் என அனைத்தும், விந்தியமலைக்கு அடுத்து உள்ளவர்கள் திராவிடர்கள் என்றே கூறுகிறத

அடையாளம்

அரசியல் சட்ட மேதை அம்பேத்கர், சமூக சீர்திருத்தவாதி தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி, காந்தி ஆகியோர் திராவிடம் குறித்து பேசி இருக்கிறார்கள். ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அவரும் இதுகுறித்து பேசி இருக்கிறார். அதைத்தான் நானும் சொல்கிறேன். இது ஏதோ திராவிடத்திற்கு ஒரு இடத்தை கொடுத்துவிட்டு போகும் செயலல்ல. இதுதான் அடையாளம்.

ஹாலிவுட்

இந்தியாவில் தொலைக்காட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திறமைக்கான நிகழ்ச்சிகள், தொடர்கள் என அனைத்தும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகளாகவே இல்லை. ஹாலிவுட்டின் நடப்பது போன்று இங்கும் பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago