முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவை மிரட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

திங்கட்கிழமை, 15 மே 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது மிகவும் ஆபத்தானதுதான் என்றும் அதேசமயத்தில் வடகொரியாவை மிரட்டவோ அல்லது அச்சுறுத்தவோ வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதீன் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் 24 நாடுகள் கலந்துகொள்ளும் மாநாட்டிற்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாமீர் புதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனையானது மிகவும் அபாயகரமானதுதான். அதற்காக அந்த நாட்டை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை புதீன் விடுத்துள்ளார். பிராந்திய அளவிலான பிரச்சினைகளை அமைதியான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் புதீன் கூறியுள்ளார்.

கூட்டு அணுஆயுத சக்தியை நாங்கள் திட்டவட்டமாக எதிர்க்கிறோம். ஏவுகணை சோதனையானது தீங்கு விளைவிக்கக்கூடியது. அபாயகரமானது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் புதீன் தெரிவித்தார். அதேசமயத்தில் வடகொரியாவை அச்சுறுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் புதீன் யோசனை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வடகொரியா நீண்டதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையானது சுமார் 2 ஆயிரத்து 111.5 கிலோ மீ்ட்டர் தூரம் உயரே பறந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரம் சென்று ஜப்பான் கடலில் விழுந்தது. இந்த வகையான ஏவுகணையானது 4500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்க வல்லது என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதை வடகொரியா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாது அணுஆயுதத்தை ஏந்திக்கொண்டு அமெரிக்காவின் நிலப்பகுதியில் விழுந்து தாக்கும் அளவுக்கு ஏவுகணையை தயாரிக்க வடகொரியா முயற்சி செய்து வருகிறது.

மேலும் வடகொரியா சோதனை நடத்திய இந்த ஏவுகணையானது ரஷ்யா எல்லையில் விழுந்தது என்றும் இதை ரஷ்யா எப்படி பொறுத்துக்கொண்டியிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டருக்கு அப்பால் ஏவுகணை விழுந்தது என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்