முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்புக் கூட்டம்

திங்கட்கிழமை, 15 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் ஃதனி அலுவலர் சந்தீப் நந்தூரி   தலைமையில்  சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.12 வெள்ளி வீதியார் ஆரம்பபள்ளியில் ரூ.23.82 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கும், வார்டு எண்.22 டோக் நகர் மெயின் சாலையில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிக்கும், வார்டு எண். 7 குலமங்கலம் மெயின் ரோட்டில் 50 அடி ரோடு முதல் அய்யனார் கோவில் தெரு வரை ரூ.42.20 லட்சம் மதிப்பில் 450 அஅ னுஐ ருபுனு மெயின் அமைக்கும் பணிக்கும், மணலூர் 5 எம்.எல்.டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கு ஏதுவாக ரூ.49.50 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டுவதற்கும் நிர்வாக ஒப்புதல் மற்றும் வேலை உத்தரவு வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக 100 வார்டுகளை அறிவிக்கும் நோக்குடன் தனிநபர் கழிப்பிடம் கட்ட மத்திய மாநில அரசு, மானியங்கள் தனிநபருக்கு வழங்கி அவர்கள் கழிப்பிடம் கட்டுவது காலதாமதமாகிதால் சில நிறுவனங்கள் மொத்தமாக தனிநபர் இடங்களில் கழிப்பிடம் கட்டி கொடுக்க முன்வந்ததன் அடிப்படையில் ஆரோக்கியா வெல்பர் டிரஸ்ட், எச்.சி.எல் வாஸ், பென்னர், ஸ்வாதா வாஷ் ஆகிய நிறுவனங்கள் மூலம் மொத்தம் 505 கழிப்பறைகள் ரூ.62 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொலிவான நகர திட்டத்தின் கீழ் ரூ.2.60 கோடி மதிப்பில் இராயகோபுரம் புராதன சின்னத்தினை மறுசீரமைப்பு மற்றும் புனரமைத்தல், ரூ.6.48 கோடி மதிப்பில் புதுமண்டபம் பகுதியில் உள்ள கடைகளை குன்னூர் சத்திரத்தில் மாற்றியமைத்தல் ஆகிய பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியம் 50:50 என்ற விகிதத்தில் மேற்கொள்வதற்கு நகராட்சி நிர்வாக ஆணையரின் நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவும், மதுரை மாநகராட்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர சமுதாய சுகாதார மையங்களாக (24மணி நேர மருத்துவமனை) தரம் உயர்த்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கட்டுமான பணி மற்றும் இதர செலவினங்களுக்கு தலா ரூ.1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டு முதற்கட்டமாக செல்லூர், அன்சாரி நகர், கோ.புதூர் ஆகிய மூன்று நகர ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.45 லட்சம் பெறப்பட்டு இந்நிதியை பயன்படுத்துவதற்கும் என சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், நகரப் பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர் (கணக்கு) கருப்பையா, நகர்நல அலுவலர் மரு.சதிஷ்ராகவன், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், உதவி ஆணையாளர்கள் அரசு, செல்லப்பா, திருமதி.கௌ சலாம்பிகை, செயற் பொறியாளர்கள் சந்திரசேகர், சேகர், ராஜேந்திரன், உதவி ஆணையாளர் (வருவாய்) ஆர்.ரெங்கராஜன், மாநகராட்சி கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற செயலாளர் ராஜ கோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்