முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் துளிர் விடும் காதல் காலம்

திங்கட்கிழமை, 15 மே 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் "ரங்கா" படத்தின் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரின் பஹால்கம் மற்றும் குல்மார்க் என்ற இடங்களில் நடந்தது. சிபிராஜ் - நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது.

"இயக்குனர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னை கேட்ட போது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை, பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை, இயற்கையும் ஆதரவாக இல்லை என பலர் எங்களை அச்சமுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதை செய்வது தான் நல்லது என எனக்கு தோன்றியது.

முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் எல்லாம் படமாக்கி விட்டோம். உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. நாங்கள் சற்றும் சளைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தக் கட்ட படப்பிடிப்பை முடித்தோம் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. சிபிராஜ் சாரும் நிகிலாவும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள். சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் சாரும், அவருடைய குழுவினரும் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது.

இத்தகைய சவாலான சூழ் நிலையிலும் ஒரு தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு குழுவினர் மட்டும் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். மற்றவர் எவர் இருந்தாலும் மூட்டை முடிச்சு கட்டி பறந்து போய் இருப்பர் என எங்கள் லொகேஷன் மானேஜர் சொன்னது எங்களை பெருமையில் ஆழ்த்தியது. அந்த உந்துதலே படப்பிடிப்பை வெற்றி கரமாக நடத்த உதவியது. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது என்றார் " தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago